Marandahalli Map

Monday, December 27, 2010

போதையில் தவறி விழுந்தவர் சாவு

பாலக்கோடு:
 அடுத்த மாரண்டஹள்ளியை சேர்ந்த திருமால் (42). அவர் மாரண்டஹள்ளி வாய்க்கால் பாலத்தின் மீது அமர்ந்து 
மது குடித்தார். போதையில் பாலத்திலிருந்து கீழே விழுந்த அவர் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்தில் இறந்தார்.


திருமாலை காணாமல் அவரது மனைவி பல இடங்களில் தேடினார். அப்போது, பாலத்திற்கு அடியில் பிணமாக திருமால் கிடந்தது தெரியவந்தது. மாரண்டஹள்ளி வி.ஏ.ஓ., நடராஜன் அளித்த புகாரின் பேரில், மாரண்டஹள்ளி போலீஸார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாலக்கோடு அரசு மருத்துவனைக்கு அனுப்பினர். போலீஸார் விசாரிக்கின்றனர்.