Marandahalli Map
Friday, April 29, 2011
Heavy Rain in Tamilnadu.
சென்னை: கோடை வெயிலில் இருந்து மக்களைக் காக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. குன்னூரில் பலத்த மழையால் கருங்கல் சுவர் இடிந்து வீடு மீது விழுந்ததில் அந்த வீடு தரைமட்டமாகி 2 குழந்தைகள் பலியாயினர். இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் நிருபர்களிடம் கூறுகையில், கன்னியாகுமரி கடல் பகுதியில் வான்வெளி மண்டல மேல் அடுக்கில் ஏற்பட்ட சுழற்சி காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவலாக கோடை மழை பெய்துள்ளது.தருமபுரி மாவட்டம் மாரண்ட ஹள்ளியில் அதிக அளவான 10 சென்டி மீட்டர் மழை பெய்திருக்கிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையில் 8 செ.மீ., குன்னூரில் 7 செ.மீ. மழை பெய்துள்ளது. பட்டுக்கோட்டை, செங்கோட்டை, தென்காசி, கரூர், ஆகிய இடங்களில் 5 செ.மீ. மழையும், ஆயக்குடி, பேராவூரணி, திருமங்கலம் ஆகிய இடங்களில் சராசரியாக 4 செ.மீ. மழையும் பெய்திருக்கிறது. இது தவிர தமிழ்நாடு, புதுச்சேரி முழுவதுமே ஆங்காங்கே மழை பெய்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்துக்கு தமிழ்நாடு-புதுச்சேரி கடலோர பகுதி மற்றும் தமிழ்நாட்டின் உள் பகுதியில் அனேக இடங்களில் மழை பெய்ய வாய்ப்புண்டு.கோடை காலத்தில் பலத்த இடி-மின்னலுடன் மழை பெய்யும். எனவே, மழை பெய்யும் போது உயர்ந்த மரத்தின் கீழேயோ, பரந்த சமவெளி பகுதிகளிலோ நிற்பதை மக்கள் தவிர்க்க வேண்டும் என்றார்.
Subscribe to:
Posts (Atom)