Marandahalli Map

Friday, June 1, 2012

சப் - ரிஜிஸ்டர் ஆஃபீஸுக்கு புதிய கட்டிடம்: எம்.எல்.ஏ., வலியுறுத்தல்

 பதிவு செய்த நாள் : ஏப்ரல் 29,2012,03:01 IST

மாரண்டஅள்ளி :
"காரிமங்கலம் மற்றும் மாரண்டஅள்ளி சப் ரிஜிஸ்டர் அலுவலகத்திற்கு சொந்த கட்டிடம் கட்டி தர வேண்டும்,'' என எம்.எல்.ஏ., அன்பழகன் சட்டசபையில் பேசினார்.
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் பாலக்கோடு எம்.எல்.ஏ., அன்பழகன் சட்டசபையில் பேசியதாவது:
பாலக்கோடு தொகுதிக்கு உட்பட்ட காரிமங்கலம் டவுன் பஞ்சாயத்து மற்றும் மாரண்டஅள்ளி டவன் பஞ்சாயத்தில் சப் ரிஜிஸ்டர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த இரண்டு இடங்களில் அலுவலகங்கள் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இரண்டு அலுவலத்திற்கு சொந்தமாக கட்டிடம் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது. புதிய கட்டிடம் கட்டித்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் சண்முகம் கூறியதாவது: எம்.எல்.ஏ., அன்பழகன் கூறியதை போல ஏற்கனவே இயங்கி கொண்டிருக்கும் பழமையான சப் ரிஜிஸ்டர் அலுவலகத்துக்கு, போதுமான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளார். அந்த இடம் தேர்வு செய்யப்பட்டு துறைக்கு ஒப்படைக்க பட்டிருக்கமானால் முன்னுரிமை அடிப்படையில் தமிழக முதல்வர் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு புதிய கட்டிடம் கட்டிதர நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு பேசினார்.

மாரண்டஅள்ளி அருகே சிறுமியை கடத்திய வாலிபர் மீது வழக்கு

பதிவு செய்த நேரம்:2012-05-31 10:08:23

மாரண்டஅள்ளி :
தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகேயுள்ள ஆத்துக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் நடராஜ். இவரது மகள் பொன்னி (16, பெயர் மாற்றப்பட்டுள்ளது). அதே பகுதியில் உள்ள பள்ளியில் 9ம் வகுப்பு படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.
நடராஜனின் பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் தயாளன். தயாளனின் வீட்டிற்கு கோவை மாவட் டம் பல்லடத்தைச் சேர்ந்த ராஜசேகர் மகன் சேகர் (38) அடிக்கடி வந்துள் ளார். சேகர் கோவைக்கு பெண் களை தையல் வேலைக்கு அழைத்துச் செல்லும் ஏஜென்ட். அப்போது பொன்னிக்கும் சேகருக்கும் பழக்கம் ஏற்பட்டது.
இந்நிலையில் கடந்த 22ம் தேதி தயாளன் வீட்டிற்குச் செல்வதாக கூறிச் சென்ற பொன்னி நீண்டநேரமாகியும் வரவில்லை. உறவினர் மற்றும் தோழி வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. தயாளனிடம் கேட்டபோது, பொன்னிக்கும், சேகருக்கும் பழக்கம் ஏற்பட்டது தெரிந்தது.
இதுகுறித்து பொன்னியின் தாய் வேடியம்மாள் மாரண்டஅள்ளி போலீ சில் சேகர் தனது மகளை கடத்திச் சென்றதாக புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரிக்கின்றனர்.

மாரண்டஅள்ளி அருகே சிறுமியை கடத்திய வாலிபர் மீது வழக்கு

பதிவு செய்த நேரம்:2012-05-31 10:08:23

மாரண்டஅள்ளி: