Marandahalli Map

Friday, June 1, 2012

மாரண்டஅள்ளி அருகே சிறுமியை கடத்திய வாலிபர் மீது வழக்கு

பதிவு செய்த நேரம்:2012-05-31 10:08:23

மாரண்டஅள்ளி :
தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகேயுள்ள ஆத்துக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் நடராஜ். இவரது மகள் பொன்னி (16, பெயர் மாற்றப்பட்டுள்ளது). அதே பகுதியில் உள்ள பள்ளியில் 9ம் வகுப்பு படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.
நடராஜனின் பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் தயாளன். தயாளனின் வீட்டிற்கு கோவை மாவட் டம் பல்லடத்தைச் சேர்ந்த ராஜசேகர் மகன் சேகர் (38) அடிக்கடி வந்துள் ளார். சேகர் கோவைக்கு பெண் களை தையல் வேலைக்கு அழைத்துச் செல்லும் ஏஜென்ட். அப்போது பொன்னிக்கும் சேகருக்கும் பழக்கம் ஏற்பட்டது.
இந்நிலையில் கடந்த 22ம் தேதி தயாளன் வீட்டிற்குச் செல்வதாக கூறிச் சென்ற பொன்னி நீண்டநேரமாகியும் வரவில்லை. உறவினர் மற்றும் தோழி வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. தயாளனிடம் கேட்டபோது, பொன்னிக்கும், சேகருக்கும் பழக்கம் ஏற்பட்டது தெரிந்தது.
இதுகுறித்து பொன்னியின் தாய் வேடியம்மாள் மாரண்டஅள்ளி போலீ சில் சேகர் தனது மகளை கடத்திச் சென்றதாக புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரிக்கின்றனர்.

No comments: