Marandahalli Map

Tuesday, May 26, 2009

பாலக்கோடு

57. பாலக்கோடு

பாலக்கோடு: பாலக்கோடு தாலுக்கா(பகுதி) பஞ்சப்பள்ளி' பெரியானூர்' நம்மாண்டஅள்ளி' சின்னேகவுண்டனஅள்ளி' சூடனூர்' கும்மனூர்' ஜிட்டாண்டஅள்ளி' மகேந்திரமங்கலம்' மாரவாடி' திம்மராயனஅள்ளி' முருக்கல்நத்தம்' பிக்கனஅள்ளி' கருக்கனஅள்ளி' வெலகஅள்ளி' ஜக்கசமுத்திரம்' கிட்டனஅள்ளி' சிக்கதோரணபெட்டம்' சாமனூர்' போடிகுட்லப்பள்ளி' அத்திமுட்லு' கெண்டனஅள்ளி' மாரண்டஅள்ளி' சென்னமேனஅள்ளி' சிக்கமாரண்டஅள்ளி' செங்கபசுவந்தலாவ்' பி.செட்டிஅள்ளி' தண்டுகாரணஅள்ளி' அண்ணாமலைஅள்ளி' அனுமந்தாபுரம்' எலுமிச்சனஅள்ளி' முக்குளம்' கும்பாரஅள்ளி' பச்சிகானப்பள்ளி' கெரகோடஅள்ளி' காரிமங்கலம்' பொம்மஅள்ளி' நரியானஅள்ளி' புலிக்கல்' கொண்டசாமஅள்ளி' சிக்கார்தஅள்ளி' ஜெர்த்தலாவ்' கரகதஅள்ளி' பாலக்கோடு' போலபடுத்தஅள்ளி' கொட்டுமாரணஅள்ளி' நாகனம்பட்டி' பெரியாஅள்ளி' அடிலம்' திண்டல்' தெல்லனஅள்ளி' பண்டரஅள்ளி' முருக்கம்பட்டி' இண்டமங்கலம்' மோலப்பனஅள்ளி' பூனாத்தனஅள்ளி' சென்றாயனஅள்ளி' தொன்னேனஅள்ளி' பைகஅள்ளி' கனவேனஅள்ளிநல்லூர்' புதிஅள்ளி' பெலமாரஅள்ளி' திருமால்வாடி' பேவுஅள்ளி' சீரியனஅள்ளி' எராசூட்டஅள்ளி' பொப்பிடி' எருதுகுட்டஅள்ளி' எரனஅள்ளி' சீராண்டபுரம்' குஜ்ஜாரஅள்ளி' உப்பாரஅள்ளி' ரங்கம்பட்டி மற்றும் கிராமங்கள். மாரண்டஅள்ளி(பேரூராட்சி)' கரியமங்கலம்(பேரூராட்சி)மற்றும் பாலக்கோடு (பேரூராட்சி)

அரசு சுகாதார நிலையத்தில் பொங்கல் வார விழா

ஜனவரி 24,2009,00:00 IST

பாலக்கோடு: மாரண்டஅள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொங்கல் வார விழா நடந்தது. சுகாதாரத்துறை துணை இயக்குனர் அய்யனார் வழிகாட்டுதலில் மாரண்டஅள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகள் நலச்சங்கத்தின் சார்பில் சுகாதாரப் பொங்கல் கொண்டாடினர். இந்நிகழ்ச்சியில், மாரண்டஅள்ளி டவுன் பஞ்சாயத்து தலைவர் ராஜகுமாரி மணிவண்ணன் தலைமை வகித்தார். வட்டார மருத்துவர் டாக்டர் முரளி முன்னிலை வகித்தார்.



நிகழ்ச்சியில் வளர் இளம் பெண்களுக்கான கோலப்போட்டி, வினாடிவினா, கொழு, கொழு குழந்தை போட்டி, கர்ப்பிணி பெண்களுக்கான போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டியில் வெற்றிபெற்றோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பொங்கல் வழங்கி, வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டன. சுகாதாரத்தின் முக்கியத்துவம் குறித்து மேற்பார்வையாளர் முருகன், சுகாதார ஆய்வாளர் சுந்தர், கர்ப்பிணிகள் பராமரிப்பு குறித்து சமுதாய சுகாதார செவிலியர் ஹனிசுசீலா ஜெயராமன், வளர் இளம்பெண்கள் சுகாதாரம் குறித்து பகுதி சுகாதார செவிலியர் தங்கமணி ஆகியோர் விளக்கினர்.

தேர்தல் புறக்கணிப்பு தொழிலாளி கைது

பாலக்கோடு :
மாரண்டஹள்ளி அருகே தேர்தல் புறக்கணிப்பு குறித்த போஸ்டர் ஒட்டிய தொழிலாளியை போலீஸார் கைது செய்தனர். மாரண்டஹள்ளியை அடுத்த சீரியம்பட்டியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி சின்னவன் (45) மக்கள் ஜனநாயக இளைஞர் கழகத்தை சேர்ந்தவர். இவர் லோக்சபா தேர்தலை புறக்கணிக்க போவதாக கூறி போஸ்டர்கள் ஓட்டினார். வி.ஏ.ஓ., பொன்னியப்பன் மாரண்டஹள்ளி போலீஸில் புகார் செய்தார். போலீஸார் விரைந்து சென்று சின்னவனை கைது செய்தனர்.