பாலக்கோடு: மாரண்டஅள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொங்கல் வார விழா நடந்தது. சுகாதாரத்துறை துணை இயக்குனர் அய்யனார் வழிகாட்டுதலில் மாரண்டஅள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகள் நலச்சங்கத்தின் சார்பில் சுகாதாரப் பொங்கல் கொண்டாடினர். இந்நிகழ்ச்சியில், மாரண்டஅள்ளி டவுன் பஞ்சாயத்து தலைவர் ராஜகுமாரி மணிவண்ணன் தலைமை வகித்தார். வட்டார மருத்துவர் டாக்டர் முரளி முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் வளர் இளம் பெண்களுக்கான கோலப்போட்டி, வினாடிவினா, கொழு, கொழு குழந்தை போட்டி, கர்ப்பிணி பெண்களுக்கான போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டியில் வெற்றிபெற்றோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பொங்கல் வழங்கி, வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டன. சுகாதாரத்தின் முக்கியத்துவம் குறித்து மேற்பார்வையாளர் முருகன், சுகாதார ஆய்வாளர் சுந்தர், கர்ப்பிணிகள் பராமரிப்பு குறித்து சமுதாய சுகாதார செவிலியர் ஹனிசுசீலா ஜெயராமன், வளர் இளம்பெண்கள் சுகாதாரம் குறித்து பகுதி சுகாதார செவிலியர் தங்கமணி ஆகியோர் விளக்கினர்.
No comments:
Post a Comment