பாலக்கோடு :
மாரண்டஹள்ளி அருகே தேர்தல் புறக்கணிப்பு குறித்த போஸ்டர் ஒட்டிய தொழிலாளியை போலீஸார் கைது செய்தனர். மாரண்டஹள்ளியை அடுத்த சீரியம்பட்டியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி சின்னவன் (45) மக்கள் ஜனநாயக இளைஞர் கழகத்தை சேர்ந்தவர். இவர் லோக்சபா தேர்தலை புறக்கணிக்க போவதாக கூறி போஸ்டர்கள் ஓட்டினார். வி.ஏ.ஓ., பொன்னியப்பன் மாரண்டஹள்ளி போலீஸில் புகார் செய்தார். போலீஸார் விரைந்து சென்று சின்னவனை கைது செய்தனர்.
No comments:
Post a Comment