Marandahalli Map

Monday, January 16, 2012

வாலிபர் மர்ம சாவு: போலீஸ் விசாரணை

வாலிபர் மர்ம சாவு: போலீஸ் விசாரணை
பதிவு செய்த நாள் : ஜனவரி 03,2012,02:07 IST
பாலக்கோடு: மாரண்டஹள்ளியில் வாலிபர் தூக்கில் பிணமாக கிடந்தார். அவரது சாவில் சந்தேகம் உள்ளது என உறவினர்கள் கூறிய புகாரை தொடர்ந்து போலீஸார் விசாரிக்கின்றனர்.
மாரண்டஹள்ளி கரகூரை சேர்ந்தவர் விவசாயி முருகன். இவரது மகன் சத்தியமூர்த்தி (23). இவர் டி.எம்.இ., படித்து விட்டு தந்தையுடன் சேர்ந்த விவசாய பணிகளை கவனித்து வந்தார். இவருக்கும் கோட்டூர் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் காதல் ஏற்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன் பெண்ணின் பெற்றோருக்கு காதல் விவரம் தெரிந்து, கடந்த இரு நாட்களுக்கு முன் சத்தியமூர்த்தியை பெண்ணின் உறவினர்கள் வந்து கண்டித்துள்ளனர். நேற்று முன்தினம் மாலை வீட்டை விட்டு சென்ற சத்தியமூர்த்தி வீடு திரும்பவில்லை.
சந்தேகம் அடைந்த சத்தியமூர்த்தியின் உறவினர்கள் அவரை தேடிய போது, அந்த பகுதியில் உள்ள மாந்÷õப்பில் சத்தியமூர்த்தி தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். காதல் தகராறில் சத்தியமூர்த்தியை கொலை செய்து இருக்கலாம் என அவரது உறவினர்கள் சந்தேகம் அடைந்தனர்.
சத்தியமூர்த்தியின் தந்தை முருகன் மாரண்டஹள்ளி போலீஸில் புகார் செய்தார். போலீஸார் மர்ம சாவு குறித்து விசாரிக்கின்றனர்.

அனுமதியின்றி மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல்

அனுமதியின்றி மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல்
பதிவு செய்த நாள் : ஜனவரி 15,2012,01:52 IST
பாலக்கோடு: மாரண்டஹள்ளி அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய டிராக்டரை வருவாய் துறையினர் பறிமுதல் செய்தனர்.மாரண்டஹள்ளி அருகே ஏரியில் அனுமதியின்றி மணல் வெட்டி கடத்துவதாக ஆர்.ஐ., கோவிந்தராஜிக்கு தகவல் வந்தது. ஆர்.ஐ., கோவிந்தராஜ் தலைமையில் உதவியாளர் முருகன் ஆகியோர் சிக்கமாரண்டஅள்ளி புதூரில் உள்ள செங்கன் பசுவன்தலாவ் ஏரிக்கு சென்றனர்.அங்கு டிராக்டரில் மணல் அள்ளியவர்கள் இவர்களை கண்டதும் தப்பியோடினர். விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த மாதுசாமி (30) என்பவருக்கு சொந்தமான டிராக்டர் என தெரியவந்தது. மாதுசாமி மீது வழக்குபதிவு செய்து டிராக்டரை பறிமுதல் செய்தனர். தாசில்தார் மணி விசாரிக்கிறார்.

குஜ்ஜாரஅள்ளியில் மக்கள் தொடர்பு முகாம்

குஜ்ஜாரஅள்ளியில் மக்கள் தொடர்பு முகாம்
பதிவு செய்த நாள் : ஜனவரி 11,2012,02:55 IST
தர்மபுரி : பாலக்கோடு தாலுகா மாரண்டஹள்ளி உள்வட்டம் குஜ்ஜாரஅள்ளியில் இன்று (ஜன.,11) காலை 11 மணிக்கு மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடக்கிறது. கலெக்டர் லில்லி தலைமை வகிக்கிறார். இதில், அனைத்து துறை அதிகாரிகளும் பங்கேற்கின்றனர். குஜ்ஜாரஅள்ளி கிராமத்தை சுற்றியுள்ள கிராம மக்கள் முகாமில் நேரில் கலந்து கொண்டு, அரசின் நலத்திட்ட உதவிகள் மற்றும் தங்கள் பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து மனு கொடுத்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மூலம் உரிய தீர்வும், நலத்திட்ட உதவிகளை பெறலாம். * அரூர் தாலுகா, அரூர் உள்வட்டம் மேலானூர் கிராமத்தில் இன்று காலை 11 மணிக்கு மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடக்கிறது. டி.ஆர்.ஓ., கணேஷ் தலைமை வகிக்கிறார். அனைத்து துறை அதிகாரிகளும் பங்கேற்கவுள்ளனர். மேலானூர் கிராமத்தை சுற்றியுள்ள கிராம மக்கள் முகாமில் கலந்து கொண்டு அரசின் நலத்திட்ட உதவிகள் மற்றும் தங்கள் பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து மனு கொடுத்து உரிய தீர்வு பெறலாம்.