Marandahalli Map

Monday, January 16, 2012

குஜ்ஜாரஅள்ளியில் மக்கள் தொடர்பு முகாம்

குஜ்ஜாரஅள்ளியில் மக்கள் தொடர்பு முகாம்
பதிவு செய்த நாள் : ஜனவரி 11,2012,02:55 IST
தர்மபுரி : பாலக்கோடு தாலுகா மாரண்டஹள்ளி உள்வட்டம் குஜ்ஜாரஅள்ளியில் இன்று (ஜன.,11) காலை 11 மணிக்கு மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடக்கிறது. கலெக்டர் லில்லி தலைமை வகிக்கிறார். இதில், அனைத்து துறை அதிகாரிகளும் பங்கேற்கின்றனர். குஜ்ஜாரஅள்ளி கிராமத்தை சுற்றியுள்ள கிராம மக்கள் முகாமில் நேரில் கலந்து கொண்டு, அரசின் நலத்திட்ட உதவிகள் மற்றும் தங்கள் பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து மனு கொடுத்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மூலம் உரிய தீர்வும், நலத்திட்ட உதவிகளை பெறலாம். * அரூர் தாலுகா, அரூர் உள்வட்டம் மேலானூர் கிராமத்தில் இன்று காலை 11 மணிக்கு மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடக்கிறது. டி.ஆர்.ஓ., கணேஷ் தலைமை வகிக்கிறார். அனைத்து துறை அதிகாரிகளும் பங்கேற்கவுள்ளனர். மேலானூர் கிராமத்தை சுற்றியுள்ள கிராம மக்கள் முகாமில் கலந்து கொண்டு அரசின் நலத்திட்ட உதவிகள் மற்றும் தங்கள் பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து மனு கொடுத்து உரிய தீர்வு பெறலாம்.

No comments: