தருமபுரி, செப்.4:
பாலக்கோடு ஒன்றியங்களில் செயல்படுத்தப்படும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட
ஆட்சியர் பெ.அமுதா வியாழக்கிழமை ஆய்வு செய்தார்.
அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் பி.செட்டிஅள்ளி, கொலசனஅள்ளி பகுதியில் புதியதாக திறக்கப்பட்ட நூலகம், மாரண்டஅள்ளியில் ரூ.10 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் பேரூராட்சி கடைகள், ரூ.327 லட்சம் மதிப்பில் பஞ்சப்பள்ளி, மாரண்டஅள்ளியில் சின்னாற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் பாலங்கள், ரூ.5 லட்சம் மதிப்பில் அகரம் பகுதியில் கட்டப்படுவரும் குளம் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.
தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ரூ.3.5 லட்சம் மதிப்பில் குமாரசெட்டி முதல் அகரம் வரை செயல்படுத்தப்படும் ஏரி வாய்க்கால் தூர் வாரும் பணி, பஞ்சப்பள்ளி அடுத்த ஒட்டத்திண்ணை பகுதியில் ரூ.15.5 லட்சம் மதிப்பில் நடைபெறும் சாலை அமைக்கும் பணி ஆகியவற்றை ஆட்சியர் ஆய்வு செய்தார்.
பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயகுமாரி, மாரண்டஅள்ளி பேரூராட்சி தலைவர் ராஜகுமாரி மணிவண்ணன், செயல் அலுவலர் மாணிக்கவேலு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment