Marandahalli Map

Saturday, June 28, 2014

பெண்ணின் பெயரில் போலியாக முகநூல் கணக்குகள் தொடங்கி, ஆபாச படங்களை வெளியிட்ட வாலிபர் கைது

பெண்ணின் பெயரில் போலியாக முகநூல் கணக்குகள் தொடங்கி, ஆபாச படங்களை வெளியிட்ட வாலிபர் கைது

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த முஹம்மது காலித், ஒரு ஓட்டலில் பணியாற்றிய போது, அங்கு வேலை செய்த இளம்பெண் மீது காதல் வயப்பட்டார். அவரது காதலை அந்த பெண் நிராகரித்ததால் அவரது இமெயில் ஐ.டி.யை அறிந்திருந்த முஹம்மது காலித், அதை வைத்து அந்த பெண்ணின் பெயரில் போலியாக ஃபேஸ்புக்கில் கணக்கை ஆரம்பித்து, அந்த பெண்ணின் புகைப்படத்துடன் ஆபாச செய்திகளையும், படங்களையும் பதிவேற்றம் செய்து, அவரது நணபர்கள் பார்க்கும்படி செய்து வந்துள்ளார்.

இது தொடர்பாக அந்த பெண் ஐதராபாத் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.  போலீசார், பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரில் 7 போலி ஃபேஸ்புக் கணக்குகளை ஆரம்பித்து,  முஹம்மது காலித் ஆபாச வேலைகளில் ஈடுபட்டதை கண்டுபிடித்தனர். இதையடுத்து அவனை கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.

மாரண்டஹள்ளி அருகே வாகனம் மோதி விவசாயி பலி

மாரண்டஹள்ளி அருகே வாகனம் மோதி விவசாயி பலி

பதிவு செய்த நேரம்:2013-11-19 10:28:32
மாரண்டஹள்ளி:  தர்மபுரி மாவட்டம் மாரண்டஹள்ளி அருகே பன்னிஹள்ளி கிராமத்தை சேர்ந்த விவசாயி வெங்கடேசன்(29). நேற்று முன்தினம் இரவு, மாரண்டஹள்ளியில் இருந்து வெள்ளிச்சந்தை நோக்கி பைக்கில் வந்து கொண்டிருந்தார். ஜக்கசமுத்திரம் கூட்ரோடு அருகே வந்தபோது, எதிரே வந்த அடையாளம் தெரியாத அவர் மீது வாகனம் மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், செல்லும் வழியிலேயே வெங்கடேசன் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி மகேந்திரமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பொங்கலால் களை கட்டியது மாரண்டஹள்ளி வாரச்சந்தையில் 3 ஆயிரம் ஆடுகள் விற்பனை

பொங்கலால் களை கட்டியது மாரண்டஹள்ளி வாரச்சந்தையில் 3 ஆயிரம் ஆடுகள் விற்பனை

பதிவு செய்த நேரம்:2014-01-13 10:11:54
மாரண்டஹள்ளி : பொங்கலையொட்டி மாரண்டஹள்ளியில் வாரச்சந்தையில் ஆடுகள் விற்பனை 
நேற்று களை கட்டியது.

தர்மபுரி மாவட்டம், மாரண்டஹள்ளியில் வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஆட்டு சந்தை கூடுகிறது. 
இந்த சந்தைக்கு மாரண்டஹள்ளி, பாலக்கோடு, பாப்பாரப்பட்டி உள்பட பல்வேறு இடங்களில் இருந்து 3ஆ யிரம் ஆடுகள் விற்பனைக்கு வந்தன. பொங்கல் பண்டிகை காரணமாக கடந்த வாரத்தைவிட ஆடுகள் அதிக விலைக்கு விற்கப்பட்டது.
நேற்று, 12 கிலோவுக்கும் மேல் எடைகொண்ட செம்மறி ஆடுகள் ரூ6 ஆயிரம் முதல் ரூ7ஆயிரம் வரையும், வெள்ளாடுகள் ரூ7 முதல் ரூ.9 ஆயிரம் வரையும் விற்கப்பட்டது. 
இதே போல் பொங்கலுக்கு தேவையான கரும்பு, வெல்லம், மண்பானை, காய்கறிகள் விற்பனையும் அமோகமாக நடந்தது.
சுற்றுப்புற கிராமங்களில் இருந்து மக்கள் அதிக அளவில் சந்தைக்கு வந்து பொருட்கள்
வாங்கிச்சென்றனர்.

மாரண்டஹள்ளி அருகே தொழிலாளி தற்கொலை

மாரண்டஹள்ளி அருகே தொழிலாளி தற்கொலை

பதிவு செய்த நாள்

11ஜூன்
2013 
04:14
பாலக்கோடு: கிட்னி செயல் இழந்த விரக்தியில் கூலி தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
மாரண்டஹள்ளியை அடுத்து ஆத்துக்கொட்டாயை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி முத்து, 60. கடந்த சில தினங்களுக்கு முன் முத்துவின் உடலில் உள்ள, இரு கிட்னிகளும் செயல் இழந்தன. இதனால், அவதிப்பட்டு வந்த முத்து கடந்த, இரு தினங்களுக்கு முன் விஷம் குடித்தார்.
தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட முத்து நேற்று முன்தினம் இரவு இறந்தார். மாரண்டஹள்ளி போலீஸார் விசாரிக்கின்றனர்.
* தர்மபுரியை அடுத்த வெள்ளோலையை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி தங்கவேல், 45. இவர் கடந்த சில தினங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணம் அடையவில்லை. விரக்தி அடைந்த தங்கவேல், கடந்த, 7ம் தேதி அவரது வீட்டின் அருகே விஷம் குடித்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கி கிடந்தார். அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். கிருஷ்ணாபுரம் போலீஸார் விசாரிக்கின்றனர்.

மாரண்டஹள்ளி போலீஸ் நிலையத்தில் வக்கீலை தாக்கிய எஸ்.ஐ. “சஸ்பெண்டு”

மாரண்டஹள்ளி போலீஸ் நிலையத்தில் வக்கீலை தாக்கிய எஸ்.ஐ. “சஸ்பெண்டு”
பதிவு செய்த நாள் : செவ்வாய்க்கிழமை, ஜூலை 05, 5:00 PM IST
தர்மபுரி, ஜூலை. 5-
மாரண்டஹள்ளி போலீஸ் நிலையத்தில் 
 வக்கீலை தாக்கிய எஸ்.ஐ. “சஸ்பெண்டு”
தர்மபுரி மாவட்டம் மாரண்டஹள்ளியை 
சேர்ந்தவர் வக்கீல் ரவிசங்கர். சம்பவத்தன்று இவரது வீட்டில் திருடு போனது.
இதையடுத்து புகார் கொடுக்க மாரண்டஹள்ளி போலீஸ் நிலையத்திற்கு சென்றார். 
அப்போது அங்கு பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் புகாரை வாங்காமால் காலதாமதம் செய்துள்ளார். இதில் எஸ்.ஐ. கணேசன், வக்கீல் ரவிசங்கரை தாக்கியதாக புகார் செய்யப்பட்டது.
இது தொடர்பாக தர்மபுரியில் வக்கீல்கள் போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கணேசமூர்த்தி, சப்-இன்ஸ்பெக்டர் கணேசனை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.