மாரண்டஹள்ளி அருகே வாகனம் மோதி விவசாயி பலி
பதிவு செய்த நேரம்:2013-11-19 10:28:32
மாரண்டஹள்ளி: தர்மபுரி மாவட்டம் மாரண்டஹள்ளி அருகே பன்னிஹள்ளி கிராமத்தை சேர்ந்த விவசாயி வெங்கடேசன்(29). நேற்று முன்தினம் இரவு, மாரண்டஹள்ளியில் இருந்து வெள்ளிச்சந்தை நோக்கி பைக்கில் வந்து கொண்டிருந்தார். ஜக்கசமுத்திரம் கூட்ரோடு அருகே வந்தபோது, எதிரே வந்த அடையாளம் தெரியாத அவர் மீது வாகனம் மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், செல்லும் வழியிலேயே வெங்கடேசன் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி மகேந்திரமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment