பணம் வைத்து சீட்டாடிய 7 பேர் அதிரடி கைது
பாலக்கோடு: மாரண்டஹள்ளி, பொம்மிடி பகுதியில் பணம் வைத்து சீட்டாடிய ஏழு பேரை போலீஸார் கைது செய்தனர்.மாரண்டஅள்ளி எஸ்.ஐ., கிருஷ்ணன் மற்றும் போலீஸார் சி.எம்.புதூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்பகுதியில் உள்ள அரசுப்பள்ளியின் பின்புறம் மூன்று பேர் சீட்டாடினர். மூன்று பேரையும் போலீஸார் சுற்றி வளைத்து கைது செய்தார். விசாரணையில், அவர்கள் அதே பகுதியை சேர்ந்த செவடப்பன், மாதேஸ்வரன், காந்தி என்பது தெரியவந்தது.* பொம்மிடி பஸ் ஸ்டாண்ட் அருகில் எஸ்.ஐ., வளர்மதி மற்றும் போலீஸார் ரோந்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த சந்தைப்பகுதியில் தமிழரசு, மாது, செல்வம், அன்புமணி ஆகியோர் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர். அவர்களை போலீஸார் கைது செய்தனர்.
No comments:
Post a Comment