Marandahalli Map

Wednesday, October 21, 2009

மாணவி தற்கொலை

மாணவி தற்கொலை


பாலக்கோடு: மாரண்டஅள்ளி அருகே விஷம் குடித்து மாணவி தற்கொலை செய்து கொண்டார். ஈச்சம்பள்ளத்தை சேர்ந்தவர் கோவிந்தன். இவரது மகள் சத்யா. அதே பகுதியில் உள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். இவருக்கு மாதவிலக்கு கோளாறு காரணமாக அடிக்கடி வயிற்றுவலி ஏற்படுமாம்.
இது போல் நேற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால், மனமுடைந்த சத்யா பூச்சி மருந்தைக் குடித்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார். மாரண்டஅள்ளி போலீஸார் விசாரிக்கின்றனர்.
`````

No comments: