பட்டாசு வெடித்து ரகளை: ஒருவர் கைது
பாலக்கோடு:
மாரண்டஹள்ளி அருகே ரோட்டில் பட்டாசு வெடித்து கலாட்டா செய்தவரை போலீஸார் கைது செய்தனர். மாரண்டஅள்ளி அடுத்த எம்.செட்டிஅள்ளியை சேர்ந்தவர் பெரியசாமி. தீபாவளியன்று இரவில் பட்டாசு வாங்கிக் கொண்டு நான்கு ரோடு வழியாக வந்தார். கையில் இருந்த பட்டாசை வெடித்து விடுவதாக ரோட்டில் நின்று கலாட்டா செய்தார். வழி முழுவதும் பட்டாசுகளை கையில் பிடித்து வெடித்தபடி மாரண்டஅள்ளி பஸ் ஸ்டாண்டிற்குள் வந்தார். தகவல் அறிந்த எஸ்.ஐ., கிருஷ்ணன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பெரியசாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment