பாலக்கோடு அருகே அரசு பள்ளி வகுப்பறை கதவை உடைத்து ஒரு லட்சத்து 98 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கம்ப்யூட்டர், லேப்டாப், ஜெராக்ஸ் மிஷின்களை கொள்ளையடித்து சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
மாரண்ட அள்ளி அடுத்த பெல்லுஅள்ளி அரசு நடுநிலைப்பள்ளியில் தலைமையாசிரியையாக சாலம்மாள் (50) உள்ளார். பி.டி.ஏ., தலைவராக நாகராஜ் (40) உள்ளார். நேற்று முன் தினம் மாலை வழக்கம் போல் தலைமையாசிரியை சாலம்மாள் பள்ளியை பூட்டிச்சென்றார்.மாரண்டஅள்ளி அடுத்த
நேற்று காலை நாகராஜ் பள்ளி பக்கம் சென்றார். அப்போது கம்ப்யூட்டர் இருந்த அறையில் கதவு உடைக்கப்பட்டிருந்தது. இது குறித்து தலைமையாசிரியைக்கு தகவல் தெரிவித்தார். தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பள்ளிக்கு விரைந்து வந்தனர்.
அறையிலிருந்து ஒரு கம்ப்யூட்டர், ஐந்து லேப் டாப்கள், ஒரு ஜெராக்ஸ் மிஷின் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. கொள்ளை போன பொருட்களின் மதிப்பு ஒரு லட்சத்து 98 ஆயிரம் ரூபாயாகும். மாரண்டஅள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொ) ராஜேந்திரன், எஸ்.ஐ., கிருஷ்ணன் ஆகியோர் விசாரித்து, கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
No comments:
Post a Comment