கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி காட்டிநாயனப்பள்ளியில் நடந்து வரும் மெகா மாட்டுச்சந்தையில், ஒரு ஜோடி காளை மாடுகள் 10 ஆயிரம் ரூபாய் முதல் ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றன.கிருஷ்ணகிரி அடுத்த காட்டிநாயனப்பள்ளி சுப்பிரமணியர் சுவாமி தைப்பூச திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. விழாவையொட்டி, ஆண்டுதோறும் ஒரு வாரம் மெகா மாட்டுச்சந்தை நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, நேற்று முன்தினம் 30ம் தேதி மாட்டு சந்தை துவங்கியது.
கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், வேலூர், திருவண்ணா மலை, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலங்களான கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலங்களில் இருந்தும் விவசாயிகளும், வியாபாரிகளும் மாடுகளை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளனர்.ஆந்திர மாநிலம் குப்பம், கர்நாடகா மாநிலம் கே.ஜி.எப்., ஆகிய பகுதியில் இருந்து விற்பனைக்கு அதிக அளவில் மாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.மாடு வாங்குவதற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்துள்ளனர். கடந்த ஆண்டை ஒப்பிடும்போது, காளை மாடுகள், பசு மாடுகள் அதிக அளவில் விற்பனைக்கு வந்துள்ளன. எனினும் வியாபாரிகள் வருகை குறைந்து காணப்படுகிறது.
No comments:
Post a Comment