மாரண்டஅள்ளி கால்நடை மருத்தகத்தில் மூன்று நாட்கள் விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் நடந்தது. கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் பாலசுப்பிரமணியம் முகாமை துவக்கி வைத்து பேசினார். மாரண்டஹள்ளி அணைக்கட்டு ஆயக்கட்டு விவசாயிகள் சங்க தலைவர் சேட்டு பயிற்சி முகாம் கையேட்டினை வெளியிட்டார். அ.மல்லாபுரம் கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவர் கணேஷ்பாபு, மகேந்திரமங்கலம் மருந்தக உதவி மருத்துவர் கோகிலவாணி ஆகியோர் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர். ஏற்பாடுகளை மாரண்டஹள்ளி கால்நடை மருத்துவமனை உதவி மருத்துவர் சரவணன் செய்திருந்தார்.
No comments:
Post a Comment