Marandahalli Map

Friday, July 1, 2011

மாரண்டஅள்ளி அருகே நர்சிங் கல்லூரிக்கு சென்ற மாணவி மாயமானார்

தர்மபுரி: மாரண்டஅள்ளி அருகே நர்சிங் கல்லூரிக்கு சென்ற மாணவி மாயமானார். மாரண்டஹள்ளி அடுத்த செம்மனஹள்ளியை சேர்ந்த விவசாயி ராமகிருஷ்ணன் மகள் ரம்யா (20). மாரண்டஹள்ளியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கிறார். நேற்று முன்தினம் கல்லூரிக்கு செல்வதாக வீட்டில் இருந்த சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது பெற்றோர் கல்லூரி நிர்வாகத்திடம் தொடர்புகொண்டபோது மாணவி கல்லூரிக்கு வரவில்லையென கூறினர். இதனால், மாணவியை பல்வேறு இடங்களில் தேடிய அவரது உறவினர்கள் மாணவி மாயமானது குறித்து மாரண்டஹள்ளி போலீஸில் நேற்று புகார் செய்தனர். மர்ம நபர்கள் சிலர் கல்லூரி செல்லும்போது தன்னை ஈவ் டீசிங் செய்வதாக சில நாட்களுக்கு முன் பெற்றோர்களிடம் தெரிவித்திருந்தார். தற்போது மாணவி மாயமானதால், மாணவியை யாராவது கடத்திசென்று இருக்கலாம் என போலீஸார் சந்தேகம் அடைந்து விசாரித்து வருகின்றனர்.

No comments: