தர்மபுரி: தர்மபுரி மதிக்கோன்பாளையம் ஒழுங்கு முறை விற்பனை கூட்டத்தில் விவசாயிகள் நேரடி விற்பனை புளி ஏலத்தில் 14.7 டன் புளி விற்பனை நடந்தது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தர்மபுரி மதிக்கோன்பாளையம் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் இந்தாண்டு முதல் வாரம் தோறும் ஞாயிற்று கிழமைகளில் விவசாயிகள் கொண்டு வரும் புளியை நேரடியாக விற்பனை செய்ய வேளாண் விற்பனை துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரத்தில் இருந்து ஏல விற்பனை நடந்து வருகிறது. கடந்த வாரம் 54 டன் புளி 11 லட்ச ரூபாய்க்கு விற்பனை நடந்தது. நேற்று முன்தினம் நடந்த ஏலத்தின் போது, தர்மபுரி, தொப்பூர், ஜருகு, நவலை, ஜாலிகொட்டாய், கடத்தூர், அரூர், பென்னாகரம், மாரண்டஹள்ளி மற்றும் தர்மபுரி சுற்று வட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் கலந்து கொண்டு தொட்டு புளி மற்றும் தோசை புளி விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
இதில், 3 லட்ச ரூபாய்க்கு 14.7 டன் புளி விற்பனை நடந்தது. தொட்டு புளி அதிக பட்சம் 16 ரூபாய் 75 பைசாவுக்கும், குறைந்த பட்சம் 12 ரூபாய்க்கும், தோசைப்புளி அதிகப்பட்சம் 71 ரூபாய் 50 பைசாவுக்கும், குறைந்தபட்சம் 67 ரூபாய்க்கும் விற்பனை நடந்தது. கொட்டை புளி அதிகபட்சம் 25 ரூபாய்க்கும், குறைந்த பட்சம் 20 ரூபாய்க்கும் விற்பனை நடந்தது. கடந்த வாரத்தை விட இந்த வாரம் புளி விலை கிலோவுக்கு 11 ரூபாய் குறைவாக விற்பனை நடந்தது.
Marandahalli Map
Monday, March 19, 2012
தர்மபுரியில் 14.7 டன் புளி ஏலம்: நேரடி விற்பனையால் விவசாயிகள் மகிழ்ச்சி
தர்மபுரியில் 14.7 டன் புளி ஏலம்: நேரடி விற்பனையால் விவசாயிகள் மகிழ்ச்சி
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 13,2012,21:00 IST
Subscribe to:
Post Comments (Atom)