விஷம் குடித்து பெண் சாவு: ஆர்டிஓ விசாரணை
First Published : 07 Mar 2012 03:18:02 PM IST
தருமபுரி, மார்ச் 6: மாரண்டஹள்ளி அருகே உள்ள செட்டிப்பட்டியை சேர்ந்தவர் ராஜா (30). இவரது மனைவி மணிமேகலை (23). இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகளாகின்றன. 2 குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் தம்பதி இடையே ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த மணிமேகலை, விஷம் குடித்து மயங்கிய நிலையில் திங்கள்கிழமை கிடந்தார். வீடு திரும்பிய ராஜா, அவரை மீட்டு மாரண்டஹள்ளி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். பரிசோதித்த மருத்துவர்கள், மணிமேகலை உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது தந்தை திம்மராயன், தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக மாரண்டஹள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீஸôர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். திருமணமாகி 5 ஆண்டுகளே ஆகியுள்ளதால் வருவாய் கோட்டாட்சியர் விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment