ரூ.96 லட்சம் மோசடி: ஒருவர் கைது
Feb 26, 2012
பங்குச் சந்தையில் முதலீடு செய்து அதிக லாபம் ஈட்டித் தருவதாகக் கூறி ரூ.96 லட்சம் வசூலித்து மோசடி செய்ததாக ஒருவர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார். மேலும், டாக்டர் உள்பட 5 பேரை தருமபுரி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸôர் தேடி வருகின்றனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறுப்படுவது: தருமபுரி மாவட்டம், மாரண்டஹள்ளி காவல் நிலையத்துக்குள்பட்ட பச்சினம்பட்டியைச் சேர்ந்தவர் உதயசந்திரன் (43). இந் நிலையில், மாரண்டஹள்ளியில் மருத்துவமனை நடத்திவரும் ஹோமியோபதி மருத்துவரான ஜெயசந்திரனுடன் (45) உதயசந்திரனுக்கு பழக்கம் கிடைத்தது. இருவரும் பங்குச் சந்தையில் முதலீடு செய்து அதிக லாபம் பெற்றுத் தருவதாகக் கூறி பலரிடம் தலா ரூ.4 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை வசூலித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் பணத்தைத் திருப்பி தராததால் பெல்ராம்பட்டியைச் சேர்ந்த சலீம் ஷா உள்பட 7 பேர், தருமபுரி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸில் வெள்ளிக்கிழமை புகார் செய்தனர். இதில், உதயசந்திரனை போலீசார் சனிக்கிழமை கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் உதயசந்திரனின் மனைவி பரிமளா, ஜெயசந்திரன், அவரது மனைவி ஜெயஸ்ரீ, தம்பி ஜெயராஜ், மைத்துனர் சோலை ஆகிய 5 பேரை போலீசார்தேடி வருகின்றனர்.
No comments:
Post a Comment