Marandahalli Map

Thursday, December 4, 2008

மாரண்டஹள்ளி அருகே: மணல் கடத்திய லாரி பறிமுதல்

மணல் கடத்திய லாரி பறிமுதல்

ஜூலை 13,2008,00:00  IST

பாலக்கோடு: மாரண்டஹள்ளி அருகே அனுமதியின்றி மணல் கடத்திய இரு லாரிகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை துணை இயக்குனர் அம்பேத்கர் மற்றும் அலுவலர்கள் தலைமையில் மாரண்டஹள்ளி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.



அப்போது, அந்த வழியாக வந்து இரு டிப்பர் லாரியை மடக்கி சோதனை செய்த போது, லாரியில் அனுமதியின்றி மணல் கடத்தியது தெரிந்தது. இதையடுத்து, இரு லாரியையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து, மாரண்டஹள்ளி போலீஸில் ஒப்படைத்தனர். போலீஸார் இரு லாரி டிரைவர்களிடம் விசாரிக்கின்றனர்.

நன்றி:தினமலர்

No comments: