Marandahalli Map

Thursday, December 4, 2008

நடுரோட்டில் இன்ஸ்பெக்டர், ஏட்டையா கட்டிப்புரண்டு சண்டை


நடுரோட்டில் இன்ஸ்பெக்டர், ஏட்டையா கட்டிப்புரண்டு சண்டை
திங்கள்கிழமை, ஜூலை 28, 2003 
    

ஓசூர்:

தர்மபுரி மாவட்டம் ஓசூர் அருகே, ஏராளமான பொதுமக்கள் சுற்றி நின்று வேடிக்கை பார்க்க, ஒருஇன்ஸ்பெக்டரும், தலைமைக் காவலரும் கட்டிப்புரண்டு சண்டை போட்டனர்.

ஓசூர் அருகே உள்ள
து மாரண்டஹள்ளி. சனிக்கிழமை இரவு தலைமைக் காவலர் நாகராஜ் என்பவர், தான்பணிபுரியும் மாரண்டஹள்ளி காவல் நிலையத்திற்கு குடிபோதையில் சென்றார். காவல் நிலையத்தில் இருந்தஇன்ஸ்பெக்டர் கிருஷ்ணனுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அவரை மற்ற காவலர்கள் தடுத்து வெளியே அனுப்பினர். இதையடுத்து அங்கிருந்து வெளியேறிய நாகராஜ்,போலீஸ் குடியிருப்புக்குச் சென்று காத்திருந்தார். 

பணி முடிந்து இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் வீட்டுக்கு வந்தபோது அவருடன் மீண்டும் தகராறு செய்தார் நாகராஜ்.

இதனால் ஆத்திரமடைந்த கிருஷ்ணன், நாகராஜைத் தாக்கினார். பதிலுக்கு நாகராஜும் தாக்கினார். இருவரும்கட்டிப்புரண்டு சண்டை போட்டனர்.

இந்த சண்டையை அப்பகுதி மக்கள் கூடி நின்று வேடிக்கை பார்த்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.பின்னர் போலீஸார் விரைந்து வந்து இருவரையும் விலக்கி விட்டனர்.

No comments: