பாலக்கோடு: மாரண்டஹள்ளி அருகே இளம்பெண்ணை கடத்தியதாக டிரைவர் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாரண்டஹள்ளியை அடுத்த ஏ.மல்லாபுரத்தை சேர்ந்த விவசாயி ஆறுமுகம் மனைவி சங்கீதா (21). இவர்களுக்கு நான்காண்டுக்கு முன் திருமணம் நடந்தது. ஒரு பெண் குழந்தையுள்ளது. கடந்த முதல் தேதி ஆறுமுகம், சங்கீதாவை அழைத்து கொண்டு தர்மபுரிக்கு செல்ல மாரண்டஹள்ளி பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்தனர். ஆறுமுகம் அந்த பகுதியில் உள்ள கடைக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார். திரும்பி வந்துபார்த்த போது சங்கீதாவை காணவில்லை. அங்கிருந்தவர்களிடம் கேட்ட போது, சங்கீதா வாலிபருடன் பஸ் ஏறி சென்றது தெரிந்தது. ஆறுமுகம் சங்கீதாவை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து மாரண்டஹள்ளி போலீஸில் புகார் செய்தார். புகாரில், "பச்சனம்பட்டியை சேர்ந்த லாரி டிரைவர் ராஜேஷ், சங்கீதாவை கடத்தி சென்றதாக' கூறியுள்ளார். எஸ்.ஐ., கந்தசாமி விசாரிக்கிறார்.
No comments:
Post a Comment