பாலக்கோடு: பாலக்கோடு அருகே இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட
வழக்கில், வாலிபரை போலீஸார் கைது செய்தனர்.
மாரண்டஹள்ளி அடுத்த அ.மல்லாபுரத்தைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளி
வெங்கடாசலம். இவரது மகள் லட்சுமி (17). ப்ளஸ் 2 படித்து வந்தார். பக்கத்து
வீட்டைச் சேர்ந்தவர் மாசிலாமணி மகன் கட்டிட மேஸ்திரி பெரியசாமி (26).
இவர் லட்சுமி காதலித்து வந்தார்.திருமணம் செய்துகொள்ளும் நோக்கத்தோடு
கடந்த 24ம் தேதி வீட்டை விட்டு வெளியேறிய இருவரும் இலக்கியம்பட்டி உள்ள
லட்சுமியின் உறவினர் துரையின் வீட்டுக்கு சென்றுள்ளார். உறவு முறையில் பெரியசாமியும்,
லட்சுமியும் அண்ணன், தங்கை என்பதால், உறவினர்கள் இருவரையும் கண்டித்தனர்.
இதையடுத்து, லட்சுமியை துரை மல்லாபுரத்துக்கு அழைத்து வந்து பெற்றோரிடம் ஒப்படைக்க
வந்தார். லட்சுமியின் பெற்றோர் லட்சுமியை தேடி இலக்கியம்பட்டி வந்தனர். துரை லட்சுமியை
வீட்டில் விட்டு விட்டு, வெளியில் வந்தார். வீட்டுக்கு சென்ற லட்சுமி தூக்கு போட்டு தற்கொலை
செய்து கொண்டார். மாரண்டஅள்ளி எஸ்.ஐ., ஜெயராமன் விசாரித்து, பெரியசாமியை நேற்று
கைது செய்தார்.
நன்றி:தினமலர்

No comments:
Post a Comment