Marandahalli Map

Thursday, December 4, 2008

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள மாரண்டஹள்ளி

தர்மபுரி:
பிறந்து ஒரு மாதமே ஆன பெண் குழந்தையைக் கொன்ற தந்தை மற்றும் அவரது தாய்க்கு தர்மபுரி நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து பரபரப்புதீர்ப்பு அளித்துள்ளது.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள மாரண்டஹள்ளி சின்னகும்மனூரைச் சேர்ந்தவர் செல்வராஜ் (30). கூலித் தொழிலாளியான இவர் 5ஆண்டுகளுக்கு முன் அதே கிராமத்தைச் சேர்ந்த செல்வி என்பவரை காதலித்து திருணம் செய்து கொண்டார்.

மகனின் காதல் திருமணத்திற்கு தாயார் சுந்தராம்மாள் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் செல்வராஜும், செல்வியும் சில காலம் பெங்களூரில்போய் வசித்து வந்தனர். பின்னர் ஊர் திரும்பினர்.

இந்த நிலையில் செல்வி கர்ப்பம் தரித்தார். ஆனால் குழந்தையைக் கலைத்து விடுமாறு சுந்தராம்மாள் வற்புறுத்தினார். அதை செல்வியும்,செல்வராஜும் ஏற்கவில்லை.

இதைத் தொடர்ந்து கடந்த 2003 ஆண்டு செல்விக்கு பெண் குழந்தை பிறந்தது. பெண் குழந்தை பிறந்ததால் செல்வராஜ் ஏமாற்றமடைந்தார். தனதுதாயின் ஆலோசனையைக் கேட்ட அவர் குழந்தையைக் கொல்ல திட்டமிட்டார்.

செல்வராஜும், அவரது தாயாரும் சேர்ந்து பிறந்து ஒரு மாதமே ஆன சிசுவின் வாயில் நெல்மணிகளைப் போட்டு கொல்ல முயற்சித்தனர். இதைப்பார்த்து விட்ட செல்வி, அவரது தாயார் ராஜாம்மாள், சகோதரி சின்னபாப்பா ஆகியோர் செல்வராஜ், சுந்தராம்மாளிடமிருந்து குழந்தையை மீட்டுமருத்துவமனக்குக் கொண்டு சென்றனர்.

ஆனால் தீவிர சிகிச்சை அளித்தும் குழந்தையைக் காப்பாற்ற முடியவில்லை. இதையடுத்து கணவர் மற்றும் மாமியார் மீது செல்வி போலீஸில் புகார்கொடுத்தார். அதன் பேரில் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

தர்மபுரி விரைவு நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடந்தது. விசாரணைக்குப் பின்னர் நேற்று இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து நீதிபதிஜெயச்சந்திரன் தீர்ப்பளித்தார். அத்தோடு இருவருக்கும் தலா ரூ. 1000 அபராதமும் விதித்தனர்.

நன்Oneindia Mobileறி:

No comments: