Marandahalli Map
Monday, June 29, 2009
விதிகளை மீறி கட்டியுள்ள கட்டடங்களை இடிக்க உத்தரவு
தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் பகுதிகளில் ஒருங்கிணைந்த கண் வங்கி தொடங்க கோரிக்கை
Tuesday, June 23, 2009
பைக்-லாரி மோதல்: விவசாயி சாவு
16 Jun 2009 10:45:29 AM IST
தருமபுரி, ஜூன் 16:தருமபுரி அருகே பைக்கில் சென்ற விவசாயி லாரி மோதி இறந்தார்.
தருமபுரி அடுத்த காரி மங்கலம், பந்தாரஹள்ளி பகுதியைச் சேர்ந்தவர் சிவக் குமார் (38). திருமண பத்திரிகை வைப்பதற்காக உறவினர் வீட்டிற்கு மனைவியுடன் பைக் கில் செவ்வாய்க்கிழமை சென்றார்.
மாரண்டஹள்ளி அடுத்த கோடியூர் பாலம் அருகே இவர்கள் சென்ற பைக் மீது லாரி மோதியதில் சிவக்குமார் அதே இடத்தில் உயிரிழந்தார்.
அவரது மனைவி மாதம்மாள் பலத்த காயங்களுடன் பாலக்கோடு மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.
சம்பவம் குறித்து பாலக்கோடு போலீஸôர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Friday, June 5, 2009
பாலக்கோடு அருகே லஞ்சம் வாங்கி கைதான சர்வேயர் சிறையில் அடைப்பு
தர்மபுரி, மே. 22-
தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டை அடுத்த மாரண்டஅள்ளி அருகே உள்ள நடுகுட்டல அள்ளி பகுதியைச்சேர்ந்த சித்தண்ணன் மகன் ராஜா (45) விவசாயி. இவருக்கு சொந்த மாக 13 1/2 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது.
இந்த நிலத்தை தனது மகன்கள் 2 பேருக்கு பிரித்துக் கொடுக்க முடிவு செய்தார். இதற்காக பாலக்கோடு தாசில்தார் அலுவலகத்தில் ரூ. 160 பணம் கட்டி விண்ணப்பித்தார்.
தாசில்தார் அலுவலகத்தில் நில அளவை பிரிவில் சர்வேயராக வேலை பார்க்கும் சிவக்குமார் (54) நிலத்தை அளந்து பிரித்து கொடுக்க ரூ. 5 ஆயிரம் லஞ்சம் கேட்டார்.
முதலில் அட்வான்சாக ரூ. 500 லஞ்சம் கொடுத்த ராஜா மேலும் ரூ. 2500 பணத்தை நிலத்தை அளக்கும்போது தருவதாக கூறினார். பின்னர் இதுகுறித்து தர்மபுரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.
துணை சூப்பிரண்டு நாச்சியப்பன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர்கள் கிருஷ்ணராஜன், சதீஷ் மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்தனர்.
சர்வேயர் சிவகுமார் விசாயி நிலத்தை அளந்து விட்டு ரூ2500 லஞ்சம் வாங்கியபோது மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சர்வேயரை கைது செய்தனர்.
அவரிடம் விசாரணை நடத்திய லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் பின்னர் அவரை தர்மபுரி சிறப்பு முதன்மை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள்.
அவரை 15 நாள் காவ லில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து சர்வேயர் சிவக்குமார் சிறையில் அடைக்கப்பட்டார்.
மாரண்டஹள்ளி அருகே பெண் மர்ம சாவு
மாரண்டஹள்ளி அருகே பெண் மர்ம சாவு
மாரண்டஹள்ளி: வெள்ளி ,ஜூன்,5, 2009
மாரண்டஹள்ளி அருகே பெண் மர்ம சாவு குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர். மாரண்டஹள்ளி எருதுகூடப்பட்டி கூட்டு ரோட்டை சேர்ந்தவர் மனோகரன். அவரது மனைவி ரத்னா. இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். கணவன், மனைவிக்கும் இடையில் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் இரவு ரத்னா வீட்டில் தீயில் கருகிய நிலையில் பிணமாக கிடந்தார். தகவல் அறிந்த மாரண்டஹள்ளி போலீஸார் பிரேதத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாரும் அவரை எரித்து கொன்றார்களா? என்பது குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.
மாரண்டஅள்ளி பேரூராட்சி அலுவலகத்தில் கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்.
மாரண்டஅள்ளி பேரூராட்சி அலுவலகத்தில்
தீர்மானத்தை எதிர்த்து ஆட்சேபனை தெரிவித்ததை தீர்மானத்தில் பதிவு செய்ய கோரி தி.மு.க. அ.தி.மு.க கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில்
ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
பேரூராட்சி கூட்டம்
தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பேரூராட்சி
அலுவலகத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ்
பணிகள் தேர்வு செய்ய அவசர ஆலோசனை கூட்டம்
நேற்று மாலை நடைபெற்றது.
கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவி ராஜகுமாரி(தி.மு.க)
தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் தார் சாலை அமைக்கும் பணிகள் மேற்கொள்ள
முடிவு செய்யப்பட்டது. அதன்படி மாரண்டஅள்ளி
பஜார் தெரு, புது வீதி, ஆகிய 2 தெருக்களில் அண்ணா
மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் தார்ச்சாலை அமைக்க
தீர்மானிக்கப்பட்டது.
இதில் புதியதாக சந்தை வீதியிலும் தார்ச்சாலை அமைக்க வேண்டும்
என சில கவுன்சிலர்கள் பேரூராட்சி தலைவியிடம் வாதாடினர்.
மாரண்டஅள்ளியில் மொத்தம் 15 கவுன்சிலர்கள் உள்ளனர்.
இதில் பேரூராட்சி தலைவி உள்பட 7 கவுன்சிலர்கள் முதலில்
முடிவுசெய்யப்பட்ட தீர்மானத்திற்கு ஆட்சேபனை தெரிவித்தார்கள்.
சந்தை வீதியும் சேர்த்து நிறைவேற்றுங்கள் என்று அவர்கள்
கூறினார்கள். இதனை சேர்க்க முடியாது என்று பேரூராட்சி தலைவி
ராஜகுமாரி கூறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Tuesday, June 2, 2009
ஜீப் மோதியதில் ஒருவர் படுகாயம்
பாலக்கோடு: மாரண்டஅள்ளி அருகே சிக்க மாரண்டஅள்ளியை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற போலீஸ்காரர் ராஜி. இவரது மகன் தேவேந்திரன் (48). கெலமங்கலத்தில் வசித்து வருகிறார். சிக்கமாரண்டஅள்ளியில் இருந்து கெலமங்கலத்துக்கு பைக்கில் நேற்று முன்தினம் இரவு வீட்டுக்கு திரும்பினார். எம்.ஜி.ஆர்.நகர் அருகே வந்த போது, எதிரே வந்த ஜீப் மோதியது. இதில், தேவேந்திரன் படுகாயம் அடைந்தார். தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். பஞ்சப்பள்ளி போலீஸார் விசாரிக்கின்றனர்.