Marandahalli Map

Friday, June 5, 2009

மாரண்டஹள்ளி அருகே பெண் மர்ம சாவு

மாரண்டஹள்ளி அருகே பெண் மர்ம சாவு

மாரண்டஹள்ளி: வெள்ளி ,ஜூன்,5, 2009

மாரண்டஹள்ளி அருகே பெண் மர்ம சாவு குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர். மாரண்டஹள்ளி எருதுகூடப்பட்டி கூட்டு ரோட்டை சேர்ந்தவர் மனோகரன். அவரது மனைவி ரத்னா. இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். கணவன், மனைவிக்கும் இடையில் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் இரவு ரத்னா வீட்டில் தீயில் கருகிய நிலையில் பிணமாக கிடந்தார். தகவல் அறிந்த மாரண்டஹள்ளி போலீஸார் பிரேதத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாரும் அவரை எரித்து கொன்றார்களா? என்பது குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

No comments: