பாலக்கோடு, 28.மே.2009
மாரண்டஅள்ளி பேரூராட்சி அலுவலகத்தில்
தீர்மானத்தை எதிர்த்து ஆட்சேபனை தெரிவித்ததை தீர்மானத்தில் பதிவு செய்ய கோரி தி.மு.க. அ.தி.மு.க கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில்
ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
பேரூராட்சி கூட்டம்
தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பேரூராட்சி
அலுவலகத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ்
பணிகள் தேர்வு செய்ய அவசர ஆலோசனை கூட்டம்
நேற்று மாலை நடைபெற்றது.
கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவி ராஜகுமாரி(தி.மு.க)
தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் தார் சாலை அமைக்கும் பணிகள் மேற்கொள்ள
முடிவு செய்யப்பட்டது. அதன்படி மாரண்டஅள்ளி
பஜார் தெரு, புது வீதி, ஆகிய 2 தெருக்களில் அண்ணா
மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் தார்ச்சாலை அமைக்க
தீர்மானிக்கப்பட்டது.
இதில் புதியதாக சந்தை வீதியிலும் தார்ச்சாலை அமைக்க வேண்டும்
என சில கவுன்சிலர்கள் பேரூராட்சி தலைவியிடம் வாதாடினர்.
மாரண்டஅள்ளியில் மொத்தம் 15 கவுன்சிலர்கள் உள்ளனர்.
இதில் பேரூராட்சி தலைவி உள்பட 7 கவுன்சிலர்கள் முதலில்
முடிவுசெய்யப்பட்ட தீர்மானத்திற்கு ஆட்சேபனை தெரிவித்தார்கள்.
சந்தை வீதியும் சேர்த்து நிறைவேற்றுங்கள் என்று அவர்கள்
கூறினார்கள். இதனை சேர்க்க முடியாது என்று பேரூராட்சி தலைவி
ராஜகுமாரி கூறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
No comments:
Post a Comment