பைக்-லாரி மோதல்: விவசாயி சாவு
16 Jun 2009 10:45:29 AM IST
தருமபுரி, ஜூன் 16:தருமபுரி அருகே பைக்கில் சென்ற விவசாயி லாரி மோதி இறந்தார்.
தருமபுரி அடுத்த காரி மங்கலம், பந்தாரஹள்ளி பகுதியைச் சேர்ந்தவர் சிவக் குமார் (38). திருமண பத்திரிகை வைப்பதற்காக உறவினர் வீட்டிற்கு மனைவியுடன் பைக் கில் செவ்வாய்க்கிழமை சென்றார்.
மாரண்டஹள்ளி அடுத்த கோடியூர் பாலம் அருகே இவர்கள் சென்ற பைக் மீது லாரி மோதியதில் சிவக்குமார் அதே இடத்தில் உயிரிழந்தார்.
அவரது மனைவி மாதம்மாள் பலத்த காயங்களுடன் பாலக்கோடு மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.
சம்பவம் குறித்து பாலக்கோடு போலீஸôர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment