பாலக்கோடு அருகே லஞ்சம் வாங்கி கைதான சர்வேயர் சிறையில் அடைப்பு
தர்மபுரி, மே. 22-
தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டை அடுத்த மாரண்டஅள்ளி அருகே உள்ள நடுகுட்டல அள்ளி பகுதியைச்சேர்ந்த சித்தண்ணன் மகன் ராஜா (45) விவசாயி. இவருக்கு சொந்த மாக 13 1/2 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது.
இந்த நிலத்தை தனது மகன்கள் 2 பேருக்கு பிரித்துக் கொடுக்க முடிவு செய்தார். இதற்காக பாலக்கோடு தாசில்தார் அலுவலகத்தில் ரூ. 160 பணம் கட்டி விண்ணப்பித்தார்.
தாசில்தார் அலுவலகத்தில் நில அளவை பிரிவில் சர்வேயராக வேலை பார்க்கும் சிவக்குமார் (54) நிலத்தை அளந்து பிரித்து கொடுக்க ரூ. 5 ஆயிரம் லஞ்சம் கேட்டார்.
முதலில் அட்வான்சாக ரூ. 500 லஞ்சம் கொடுத்த ராஜா மேலும் ரூ. 2500 பணத்தை நிலத்தை அளக்கும்போது தருவதாக கூறினார். பின்னர் இதுகுறித்து தர்மபுரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.
துணை சூப்பிரண்டு நாச்சியப்பன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர்கள் கிருஷ்ணராஜன், சதீஷ் மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்தனர்.
சர்வேயர் சிவகுமார் விசாயி நிலத்தை அளந்து விட்டு ரூ2500 லஞ்சம் வாங்கியபோது மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சர்வேயரை கைது செய்தனர்.
அவரிடம் விசாரணை நடத்திய லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் பின்னர் அவரை தர்மபுரி சிறப்பு முதன்மை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள்.
அவரை 15 நாள் காவ லில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து சர்வேயர் சிவக்குமார் சிறையில் அடைக்கப்பட்டார்.
No comments:
Post a Comment