விதிகளை மீறி கட்டியுள்ள கட்டடங்களை இடிக்க உத்தரவு
First Published : 08 Jun 2009 12:52:00 AM IST
Last Updated :
தருமபுரி, ஜூன் 7: தருமபுரி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகளில் விதிகளை மீறி கட்டியுள்ள கட்டடங்களை இடிக்க மாவட்ட ஆட்சியர் பெ.அமுதா உத்தரவிட்டுள்ளார். இது குறித்து மாவட்ட ஆட்சியர் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தருமபுரி மாவட்டத்திலுள்ள பென்னாகரம், மாரண்டஹள்ளி மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சிகளில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளது. பென்னாகரம் பேரூராட்சி பகுதிகளில் கட்டட விதமுறைகளுக்கு புறம்பாக கட்டப்பட்டுள்ள கட்டடங்களை இடிக்குமாறு பேரூராட்சி செயல் அலுவலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிப் பகுதிகளில் கட்டட விதிமுறைகளுக்கு புறம்பாக கட்டப்பட்டுள்ள கட்டடங்களை இடிக்கவும் அல்லது கட்டட உரிமையாளர்களே அப்புறப்படுத்திக்கொள்ளுமாறு வலியுறுத்தவும் தருமபுரி மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் ப.ருக்குமணிக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment