கஞ்சா கடத்திய வாலிபர் கைது
பதிவு செய்த நாள் : ஜூலை 20,2011,01:48 IST
ஓசூர்: ஓசூர் அருகே கஞ்சா கடத்திய
வாலிபரை போலீஸார் கைது செய்தனர். ஓசூர் சிப்காட் எஸ்.ஐ., மோகன் மற்றும்
போலீஸார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். சிப்காட்டில் இருந்து
பள்ளூர் செல்லும் பிரிவு சாலையில் சந்தேகத்துக்கு இடமாக கையில் பையுடன்
நின்ற வாலிபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர் மறைத்து
வைத்திருந்த பையில் 10 கிலோ கஞ்சா இருப்பது தெரிந்தது. கஞ்சாவை பறிமுதல்
செய்து, அவரை கைது செய்தனர். விசாரணையில், அவர் மாரண்டஅள்ளி புதுத்தெருவை
சேர்ந்த தியாகராஜ் (31) என தெரிந்தது.