Marandahalli Map

Friday, October 21, 2011

கிராமங்களில் பிரியாணியுடன் வாக்காளர்களுக்கு விருந்து

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் நேற்று நடந்த இரண்டாம் கட்ட தேர்தலின் போது கிராம பகுதி வாக்காளர்களுக்கு வேட்பாளர்கள் சார்பில் பிரியாணி வழங்கப்பட்டது.
தேர்தல் கமிஷன் வாக்காளர்களுக்கு வேட்பாளர்கள் வழங்கும் இலவசங்களை தடுக்க பல்வேறு நடவடிக்கை எடுத்த போதும், மறைவான பகுதியில் இருந்து வேட்பாளர்களுக்கு பணம் மற்றும் பிரியாணிகள் வழங்குவது உள்ளாட்சி தேர்தலிலும் நடந்தது.தர்மபுரி மாவட்டத்தில் நேற்று நடந்த இரண்டாம் கட்ட தேர்தலில் நல்லம்பள்ளி யூனியனுக்கு உட்பட்ட பாகலஅள்ளி, சேசம்பட்டி உள்ளிட்ட பல பஞ்சாயத்துக்களிலும், பொ.மல்லாபுரம், பாலக்கோடு, மாரண்டஹள்ளி உள்ளிட்ட டவுன் பஞ்சாயத்து பகுதியிலும் வேட்பாளர்கள் பலர் ஓட்டு சாவடிக்கு 200 மீட்டருக்கு முன் நின்று வாக்காளர்களை தங்களுக்கு ஓட்டு போடும்படி வேண்டுகோள் விடுத்தனர்.

No comments: