லக்கோடு: மாரண்டஅள்ளி பேரூராட்சி தலைவர் பதவிக்கு திமுக சார்பில் சாவித்திரி, அதிமுக சார்பில் கலைவாணி உள்ளிட்ட 6 பேர் போட்டியிட்டனர்.
இதில் அதிமுக வேட்பாளர் கலைவாணி 2960 வாக்கு பெற்று வெற்றிபெற்றார்.
இவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் சாவித்திரி 1389 வாக்கு பெற்றார்.
இந்த பேரூராட்சியில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் விபரம் வருமாறு:
1வது வார்டுக்கு தங்க சரவணன்(திமுக),
2வது வார்டுக்கு உஷா(திமுக),
3வது வார்டுக்கு கோவிந்தன்(அதிமுக),
4வது வார்டுக்கு கண்ணன்(அதிமுக),
5வது வார்டுக்கு காசிநாதன்(அதிமுக),
6வது வார்டுக்கு மகேந்திரன்(அதிமுக),
7வது வார்டுக்கு செந்தில்(அதிமுக),
8வது வார்டுக்கு மணிகண்டன்(சுயேட்சை),
9வது வார்டுக்கு இந்திராணி(சுயேட்சை),
10வது வார்டுக்கு புவனேஷ்வரி(சுயேட்சை),
11வது வார்டுக்கு ஆனந்தி(அதிமுக),
12வது வார்டுக்கு சரோஜா(சுயேட்சை),
13வது வார்டுக்கு சின்னச்சாமி(சுயேட்சை),
14வது வார்டுக்கு தேவி(சுயேட்சை),
15வது வார்டுக்கு பாலசுப்பிரமணியம் (அதிமுக) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த பேரூராட்சியில் அதிமுக 7 இடங்களையும்,
திமுக 2 இடங்களையும், சுயேட்சைகள் 6 இடங்களையும் கைப்பற்றியுள்ளனர்.
15வது வார்டு கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பாலசுப்பிரமணியம் அதிமுக நகர செயலாளராக உள்
ளார்.