தர்மபுரி மாவட்டத்தில், பாலக்கோடு, பென்னாகரம், தர்மபுரி, மொரப்பூர், அரூர் (தனி) ஆகிய ஐந்து தொகுதிகள் இருந்தன. தொகுதி சீரமைப்பில், மொரப்பூர் நீக்கப்பட்டு, புதிதாக பாப்பிரெட்டிபட்டி உருவாக்கப்பட்டுள்ளது.பாலக்கோடு: அ.தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் அன்பழகன் இங்கு எம்.எல்.ஏ., வாக உள்ளார். இவர் எதிர்க்கட்சியில் இடம்பெற்றதால், குறிப்பிட்டுச் சொல்லும்படியான பணிகள் நடக்கவில்லை.
![]() |
விவசாயத்தை பிரதானமாகக் கொண்ட பாலக்கோட்டில், சின்னாற்று தண்ணீரை தொகுதியில் பல்வேறு பகுதிக்கு பாசனத்துக்கு பயன்படுத்த முடியாத நிலை. தொலைக்காது நீர்த்தேக்கத் திட்டப் பணிகள் உள்ளிட்ட பாசன வசதிக்கான எல்லா திட்டங்களும் கிடப்பில் உள்ளன.சின்னாறு படுகை இருந்தபோதும், ஆண்டுதோறும் கோடை காலங்களில் மாரண்டஹள்ளி பேரூராட்சி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க முடியவில்லை.அமைச்சராக இருந்தபோது செய்த பணிகள் மற்றும் கிராமப் பகுதிகளில் அ.தி.மு.க.,வுக்கு உள்ள செல்வாக்கு அன்பழகனுக்கு சாதகமாக உள்ளது. தி.மு.க., கூட்டணியில் இத்தொகுதியை பா.ம.க.,வுக்கு ஒதுக்கியுள்ளதால், அ.தி.மு.க., கூட்டணியின் வெற்றி வாய்ப்பு சுலபமாக இருக்கும்.
No comments:
Post a Comment