தர்மபுரி:தர்மபுரி மாவட்டத்தில் இரண்டாம் கட்ட தேர்தல் நடந்த பல பகுதியில் அரசியல் கட்சியினர் ஓட்டு சாவடி முன் குவிந்திருந்து வாக்காளர்களிடம் ஓட்டு கேட்டதால், பல ஓட்டு சாவடிகளில் அரசியல் கட்சியினரை கட்டுப்படுத்த முடியாமல் போலீஸார் திணறி போகினர்.தர்மபுரி மாவட்டத்தில் நேற்று இரண்டாம் கட்டமாக நல்லம்பள்ளி, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, பாலக்கோடு ஆகிய ஒன்றியங்களுக்கும், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, பொ.மல்லாபுரம், பாலக்கோடு, மாரண்டஹள்ளி ஆகிய ஐந்து டவுன் பஞ்சாயத்துக்கும் மொத்தம் 838 ஓட்டு சாவடிகளில் தேர்தல் நடந்தது.தேர்தல் நடக்கும் பகுதியில் பதட்டமான ஓட்டு சாவடிகளில் கூடுதல் போலீஸாரும், சிறப்பு அதிரடிப்படை போலீஸாரும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர். இருந்த போதும் நேற்று பல இடங்களில் அரசியல் கட்சியினர் விதி முறை மீறி ஓட்டு சாவடி முன் குவிந்தனர். அரசியல் கட்சியினரை கட்டுப்படுத்த முடியாமல் போலீஸார் திணறி போயினர்.குறிப்பாக நல்லம்பள்ளி யூனியனுக்கு உட்பட்ட அனைத்து ஓட்டு சாவடிகள் முன்பும் அரசியல் கட்சினர் நின்று கொண்டு ஓட்டு போட வந்த பொதுமக்களிடம் ஓட்டு கேட்டும், ஓட்டு போட சொல்லியும் வலியுறுத்தினர்.
No comments:
Post a Comment