Marandahalli Map

Tuesday, October 25, 2011

தீபாவளி பண்டிகைக்காக மாரண்டஅள்ளி சந்தையில் ஆடு விற்பனை அதிகரிப்பு

பாலக்கோடு: மாரண்டஅள்ளியில் புகழ் பெற்ற ஆட்டு சந்தை ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமையன்று கூடுவது வழக்கம். நேற்று காலை வழக்கம்போல் வாரச்சந்தை கூடியது. புரட்டாசி மாதம் என்பதால் கடந்த ஒரு மாதமாக மாரண்டஅள்ளி சந்தையில் ஆடு விற்பனை மந்தமாக இருந்தது. தற்போது புரட்டாசி முடிந்து விட்டதாலும், தீபாவளி பண்டிகை நெருங்குவதாலும் நேற்று சந்தையில் ஆடு விற்பனை அதிகளவில் நடந்தது.
கடந்த 5 வாரங்களாக 1500 ஆடுகள் மட்டுமே விற்பனைக்கு வந்தது. நேற்று நடந்த சந்தையில் 5 ஆயிரத்துக்கும் அதிகமான ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. கடந்த வாரங்களில் 25 முதல் 30 கிலோ எடை கொண்ட ஒரு வெள்ளாடு ஞி5500க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று ஞி6500க்கும் அதிகமாக இந்த ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன. ஞி2500 முதல் ஞி3 ஆயிரம் வரை விற்பனையாகும் செம்மரி ஆடு நேற்று ஞி3500க்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டது.
பாப்பாரப்பட்டி, பையூர், காவேரிபட்டணம், பென்னாகரம், அத்திமுட்லு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன. மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து 30 முதல் 50 கிலோ எடை கொண்ட ராட்சத வெள்ளாடுகள் விற்பனைக்கு வந்தது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்து ஆடுகளை வாங்கிச் சென்றனர். ஆடுகள் அதிக விலைக்கு விற்றதால் ஆடு வளர்ப்பவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

No comments: