Marandahalli Map

Wednesday, April 30, 2014

நில அபகரிப்பு வழக்கில் முதல் முறையாக 2 பேருக்கு சிறைத் தண்டனை விதிப்பு!

நில அபகரிப்பு வழக்கில் முதல் முறையாக 2 பேருக்கு சிறைத் தண்டனை விதிப்பு!
Posted by: Mathi Published: Friday, April 19, 2013, 12:47 [IST]

தர்மபுரி: தமிழகத்தில் நில அபகரிப்பு தொடர்பான வழக்கில் முதல் முறையாக தர்மபுரி மாவட்டத்தில் 2 பேருக்கு 1 ஆண்டு மற்றும் 1 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்ற உடன் ஏராளமான நில அபகரிப்பு வழக்குகள் புற்றீசல் போல் பெருகின. போலீசாரும் வழக்குப் பதிவு செய்து பல்லாயிரம் ஏக்கர் நிலத்தை மீட்டனர். பல வழக்குகளில் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு நீதிமன்ற விசாரணையும் நடைபெற்று வருகிறது. இதேபோன்ற ஒருவழக்குதான் தர்மபுரி மாவட்டம் மாரண்ட அள்ளியை சேர்ந்த சைலேந்தர் என்பவர் தொடுத்தது! சைலேந்தரும் அவரது தம்பி சிவக்குமாரும் கொண்டேன் அள்ளி கிராமத்தில் 3 ஏக்கர் 7 சென்ட் நிலத்தை கடந்த 2006-ம் ஆண்டு அதே ஊரைச் சேர்ந்த சிவஞானம் என்பவரிடம் இருந்து ரூ. 1 லட்சத்து 52 ஆயிரத்திற்கு விலைக்கு வாங்கி அந்த நிலத்தில் விவசாயம் செய்து வந்தனர். இந்நிலையில் அவர்களின் பக்கத்து நிலத்துக்காரர்களான ஆனந்தன், அவருடைய சகோதரர் பெருமாள் ஆகியோர் அந்த நிலத்தை குறைந்த விலைக்கு கேட்டு அடிக்கடி மிரட்டி வந்தனர். கடந்த 14.8.2011 அன்று சைலேந்தர் தனக்கு சொந்தமான விவசாய நிலத்திற்கு சென்றார். அப்போது ஆனந்த், பெருமாள் ஆகியோர் ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்து கொலை மிரட்டல் விடுத்தனர். இதுதொடர்பாக சைலேந்தர் தர்மபுரி நில ஆக்கிரமிப்பு தடுப்பு பிரிவில் புகார் செய்தார். இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இந்த வழக்கு விசாரணையின் முடிவில் ஆனந்த், பெருமாள் ஆகிய 2 பேருக்கும் 2 பிரிவுகளில் ஒரு ஆண்டு மற்றும் ஒரு மாத சிறை தண்டனை விதித்து முதன்மை குற்றவியல் நடுவர் குணசேகரன் தீர்ப்பு அளித்தார். இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிடப்பட்டது. தமிழகத்தில் நில அபகரிப்பு வழக்கில் முதல் முறையாக 2 பேருக்கு தண்டனை கிடைத்திருப்பது தர்மபுரியில்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more at: http://tamil.oneindia.in/news/2013/04/19/tamilnadu-dharmapuri-records-first-conviction-in-land-grabbing-173745.html

கோடை மழை அறிகுறி துவக்கம் மாவட்ட விவசாயிகள் நம்பிக்கை

கோடை மழை அறிகுறி துவக்கம் மாவட்ட விவசாயிகள் நம்பிக்கை

பதிவு செய்த நாள்

16ஏப்
2014 
06:25
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் கோடை மழைக்கான அறிகுறி துவங்கி உள்ளதால், சித்திரை பட்டத்தில் பயிர்களை நடவு செய்ய முடியும் என்ற நம்பிக்கை விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.
தர்மபுரி மாவட்டம் விவசாயத்தை பிரதானமாக கொண்ட மாவட்டம் ஆகும். மாவட்டத்தில், இறவை பாசனத்தில் நெல், கரும்பு, மஞ்சள், தக்காளி, மரவள்ளி, தென்னை உள்ளிட்ட பயிர்கள் மற்றும் தோட்டக்கலைத்துறை பயிர்கள், மலர்கள் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.
இதே போன்று, விவசாயிகள் தென்கிழக்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை மற்றும் கோடை மழையில் சித்திரை பட்டத்திலும், பயிர்களை மானாவாரியாகவும், இறவை பாசனத்திலும் பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். கடந்தாண்டு, மாவட்டத்தில் பருவ மழை எதிர்பார்த்த அளவு பெய்யாததால், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், மாவட்டத்தில், கடந்த ஃபிப்ரவரி மாதம் முதல் வெயில் கொளுத்தி வருகிறது. குறிப்பாக, கடந்த மார்ச் மாதம், 20ம் தேதி முதல் வெயிலின் அளவு, 100 டிகிரியை தாண்டி வருகிறது. இதனால், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அவதி அடைந்தனர்.
கடந்தாண்டு, ஏப்ரல் மாதம் கோடை மழை பெய்ததால் வெயிலின் தாக்கம் ஓரளவுக்கு குறைந்ததுடன், சித்திரை பட்டத்தில் பயிர்களை சாகுபடி செய்ய உழவு பணிகளை செய்ய முடிந்ததால், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கடந்தாண்டை போல் இந்தாண்டும், கடந்த சில தினங்களாக கோடை மழை, வெறும் சாரலோடு மட்டுமே நின்றதால், விவசாயிகளும், மக்களும் ஏமாற்றம் அடைந்தனர்.
இந்நிலையில், கடந்த, 6ம் தேதி ஒகேனக்கல் மற்றும் பென்னாகரம் பகுதியில் கோடை மழை பெய்ததால், அப்பகுதி மக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். தர்மபுரியிலும், சில தினத்துக்கு முன் லேசான மழை பெய்ததால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். 
இந்நிலையில், மாரண்ட அள்ளி பகுதிகளில், 33 மில்லி மீட்டர் மழையும், ஒகேனக்கல்லில், 22 மில்லி மீட்டர் மழையும் பெய்தததால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், சித்திரை பட்டத்தில் பயிர்களை நடவு செய்ய மாவட்டத்தில் கோடை மழை பெய்யும் என விவசாயிகள் மத்தியில் நம்பிக்கை எழுந்துள்ளது.

கள்ளகாதல்; கணவரை கொலை செய்த மனைவி

கள்ளகாதல்; கணவரை கொலை செய்த மனைவி

January 9, 2014  11:57 am

தர்மபுரி மாவட்டம் மாரண்ட அள்ளி அருகே உள்ள மிஸ்கிரிஅள்ளி 
கிராமத்தை சேர்ந்தவர் சின்னசாமி (வயது 44). இவரது 
மனைவி லட்சுமி (40). சின்னசாமிக்கும் அதே ஊரைச் சேர்ந்த ஒரு 
பெண்ணுக்கும் இடையே கள்ளத் தொடர்பு இருந்து வந்தது. இதை மனைவி கண்டித்தார்.

ஆனால் சின்னசாமி கள்ளத் தொடர்பை கைவிட மறுத்து விட்டார். 
இதனால் கணவன்மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

குடும்பத்தில் நிம்மதி இல்லாமல் போனது. மனைவியை சின்னசாமி திட்டினார். 
இதனால் மனம் வெறுத்து போன லட்சுமி இன்று அதிகாலை மணிக்கு 
கணவர் தூங்கிக்கொண்டு இருந்த போது அவரது தலையில் கல்லை போட்டு 
விட்டார். இதில் இரத்த வெள்ளத்தில் அவர் பலியானார்.

பின்னர் லட்சுமி மாரண்டஅள்ளி பொலிஸ் நிலையத்துக்கு சென்று க
ணவரை கொன்று விட்டதாக கூறி பொலிஸில் சரண் அடைந்தார்.

அதன் பிறகு பொலிஸார் லட்சுமியின் வீட்டுக்கு சென்று கொலை 
செய்யப்பட்ட சின்னசாமி பிணத்தை கைப்பற்றி அரச வைத்தியசாலைக்கு 
அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக லட்சுமியிடம் 
பொலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பாலக்கோடு அருகே பெண்ணை தாக்கிய விவசாயி கைது

பாலக்கோடு அருகே பெண்ணை தாக்கிய விவசாயி கைது

கருந்தலை புழுக்களால் தென்னைகள் பாதிப்பு! தர்மபுரி மாவட்ட விவசாயிகள் கவலை

கருந்தலை புழுக்களால் தென்னைகள் பாதிப்பு! தர்மபுரி மாவட்ட விவசாயிகள் கவலை

பதிவு செய்த நாள்

11ஏப்
2014 
06:20
தர்மபுரி: கருந்தலைப் புழு தாக்குதல் காரணமாக, தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டு வருவதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டம் விவசாயத்தை பிரதானமாக கொண்ட மாவட்டம் ஆகும். மா, கரும்பு, மஞ்சள், ஆகியவற்றுக்கு, அடுத்த படியாக, மாவட்டத்தில் பாலக்கோடு, மாரண்டஹள்ளி, காரிமங்கலம், பாப்பிரெட்டிப்பட்டி உட்பட, 9,700 ஹெக்டேரில், தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் போதிய பருவமழை இல்லாததால், தென்னை விவசாயிகள் பாதிக்கப்பட்டு வந்தனர்.
இந்நிலையில், விவசாயிகளை, மேலும், கவலை அடைய செய்யும் வகையில், மாவட்டம் முழுவதும் பரவலாக கடந்த, சில மாதங்களாக, தென்னை மரங்களில், கருந்தலைப் புழுக்கள் தாக்குதல் அதிகரித்துள்ளது. இதனால், தென்னங்கீற்றுகள் பசுமை இழந்து காணப்படுவதுடன், தென்னை மரம் முற்றிலும் பாதிக்கப்பட்டு வருகிறது. மேலும், அருகில் உள்ள மரங்களுக்கும், கருந்தலைப் புழு தாக்குதல் பரவுவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
வேளாண்மைத்துறையினர் கூறியதாவது:
கருந்தலைப் புழுக்கள் தென்னங்கீற்றுகளில், அடிபாகத்தில், தங்கி, பச்சையத்தை சுரண்டி, கீற்றுக்களின், வளர்ச்சியை பாதிக்கும். கருந்தலைப் புழுத்தாக்குதல், மார்ச் மாதம் முதல் மே மாதம் கோடை காலங்களில், அதிகளவில் இருக்கும். கருந்தலைப் புழுவின் தாய், அந்துப்பூச்சி, சிறியதாகவும், சாம்பல் நிறத்துடன் காணப்படும். இப்பூச்சிகள், தென்னங்கீற்றின் அடிப்பாகத்தில், பச்சையம் சுரண்டப்பட்ட பகுதிக்கு அருகில், முட்டைகளை இடுகின்றன.
சராசரி புழுப்பருவம், 42 நாட்கள் ஆகும். 12 நாட்களில், கூட்டுகுழு பருவத்தில் இருந்து வெளிவரும் அந்துப்பூச்சிகள், தங்களது இனசேர்க்கையை மேற்கொண்டு, ஒரு புழு தென்னங்கீற்றுகளில், 135 முட்டைகள் வரை இடுகின்றன. தாய் புழுக்கள், 60 நாட்களில் இறந்து விடும். எனவே, அதன் பருவத்துக்கு ஏற்ப கருந்தலைப் புழுக்களை கட்டுப்படுத்த வேண்டும். கருந்தலைப் புழு தாக்கப்பட்ட, கீழ் அடுக்கில் உள்ள தென்னங்கீற்றுக்களை வெட்டி எரித்து விடவேண்டும்.
கருந்தலைப் புழு தாக்குதல் அதிகமாக இருக்கும் போது, ஒரு லிட்டர் தண்ணீரில், இரண்டு மில்லி டைகுளோர்வாஸ் அல்லது, ஐந்து மில்லி மாலத்தியான் மருந்தினை, ஒரு மில்லி ஒட்டும் திரவத்துடன் கலந்து தெளிக்க வேண்டும். கருந்தலைப் புழுக்கள், மிக அதிகளவில் தாக்கப்பட்ட மரங்களின் நன்கு வளர்ந்த இளஞ்சிவப்பு நிறமுள்ள வேரினை சாய்வாக வெட்டிய பின், துளைகள் இல்லாத பாலிதீன் பையில், 10 மில்லி தண்ணீருடன், 10 மில்லி மானோகுரோடோபாஸ் மருந்தை கலந்து வேரில் கட்டிவிட வேண்டும்.
மேலும், 25 நாட்களுக்கு பின், கருந்தலைப் புழுவின், புழு பருவத்தை கட்டுப்படுத்த, ஒரு மரத்துக்கு பிரகானிட், 20, பெத்லிட், பத்து ஒட்டுண்ணிகளை விடவேண்டும். கூட்டுபுழுவை கட்டுப்படுத்த மரம், ஒன்றுக்கு, 20 என்ற எண்ணிக்கையில், சால்சிட் அல்லது யுலோபிட் ஒட்டுண்ணிகளை விடவேண்டும். 15 நாட்களுக்கு, ஒரு முறை வீதம், ஐந்து அல்லது, ஆறு முறை ஒட்டுண்ணிகளை, தென்னை மரங்களில் விடுவதன் மூலம் கருந்தலைப் புழுக்களை கட்டுபடுத்தலாம்.
தற்போது, மாரண்டஹள்ளி பகுதியில், தென்னையில் கருந்தலைப் புழுக்கள் தாக்கம் அதிகளவில் உள்ளது. அங்கு, அட்மா திட்டத்தின் கீழ், நான்கு லட்ச ரூபாய் மதிப்பில், விவசாயிகளுக்கு, கருந்தலைப் புழு தாக்குதலை கட்டுப்படுத்த மருந்துக்கள் மற்றும் ஒட்டுண்ணிகள் வழங்கப்பட்டு வருகிறது, என்றார்.

பொருட்களை திருடிய வாலிபர் அதிரடி கைது

பொருட்களை திருடிய வாலிபர் அதிரடி கைது

பதிவு செய்த நாள்

02ஏப்
2014 
02:45
மாரண்ட ஹள்ளி : தர்மபுரி மாவட்டம் மாரண்ட ஹள்ளியில், 
தனியார் பள்ளியில் கட்டுமான பொருட்களை திருடிய வாலிபரை போலீஸார் கைது செய்தனர்.
தர்மபுரி மாவட்டம் மாரண்டஹள்ளி ரயில்வே ஸ்டேஷன் எதிரே தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் விடுமுறை தினம் என்பதால், பள்ளியின் சத்துணவு ஊழியர்கள் மட்டுமே பள்ளியில் இருந்தனர். இந்நிலையில், பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்து, பள்ளியில் இருந்த கட்டுமான பொருட்களை, மர்மநபர் ஒருவர் திருடி கொண்டிருப்பதை, சத்துணவு ஊழியர்கள் கண்டனர்.
இதுகுறித்து, அவர்கள், பள்ளி தாளாளருக்கு தகவல் தெரிவித்தனர். அவரது புகாரின் பேரில், மாரண்டஹள்ளி போலீஸார், விரைந்து சென்று, அந்த மர்நபரை மடக்கி பிடித்து விசாரித்தனர். 
விசாரணையில், அந்த நபர், எம்.வெட்டுஹள்ளியை சேர்ந்த மாதேஸ்,30 என்பதும், கட்டுமான பொருட்களை திருடி, விற்பனை செய்ய முயற்சித்ததும், தெரியவந்தது. இதனையடுத்து, மாதேஸை, போலீஸார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

தருமபுரி அருகே கிரேன் முறிந்து விழுந்து 2 சிறுவர்கள் சாவு

தருமபுரி அருகே கிரேன் முறிந்து விழுந்து 2 சிறுவர்கள் சாவு


First Published : 17 March 2014 02:49 AM IST
தருமபுரி அருகே கிணறு தூர்வாரும் பணியின்போது கிரேன் முறிந்து விழுந்ததில் 2 சிறுவர்கள் உயிரிழந்தனர்.
தருமபுரி மாவட்டம், மாரண்டஹள்ளி அருகேயுள்ள வட்டகானம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சகோதரர்கள் வேலு, காளியப்பன். விவசாயிகள். இருவருக்கும் பொதுவான கிணற்றில் சில தினங்களாக கிரேன் உதவியுடன் தூர்வாரும் பணி மேற்கொள்ளப்பட்டு வந்தது.
சனிக்கிழமை தூர்வாரும் பணி நடைபெற்றபோது, எதிர்பாராதவிதமாக கிரேன் அறுந்து விழுந்தது. அப்போது, அருகில் விளையாடிக் கொண்டிருந்த வேலு மகன் ஹரிபிரசாத் (8), காளியப்பன் மகன் பார்த்திபன் (10) ஆகியோரையும் இழுத்துக் கொண்டு கிணற்றுக்குள் விழுந்தது.
இதில் பலத்த காயமடைந்த ஹரிபிரசாத் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த பார்த்திபன் சிகிச்சைக்காக பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.
இது வெளியில் யாருக்கும் தெரியாமல் கிணற்றின் அருகே குழிதோண்டி ஹரிபிரசாத் சடலத்தை புதைத்தனர். இத்தகவல் போலீஸார் மற்றும் வருவாய்த் துறையினருக்கு ஞாயிற்றுக்கிழமை காலை தெரியவந்தது.
சம்பவ இடத்துக்கு மருத்துவர்கள் குழுவினருடன் சென்ற அதிகாரிகள் புதைக்கப்பட்ட ஹரிபிரசாத் சடலத்தை தோண்டி எடுத்து அங்கேயே பிரேத பரிசோதனை செய்தனர்.
இதுகுறித்து மாரண்டஹள்ளி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவான மல்லாபுரத்தைச் சேர்ந்த கிரேன் உரிமையாளர் ஆறுமுகத்தைத் தேடி வருகின்றனர்.
இச்சம்பவத்தில் உயிரிழந்த ஹரிபிரசாத் மல்லாபுரம் அரசுப் பள்ளியில் 3ஆம் வகுப்பும், பார்த்திபன் 5ஆம் வகுப்பும் படித்து வந்தனர்.

கோடை வெயில் துவக்கம்: இளநீர் விற்பனை அமோகம்

கோடை வெயில் துவக்கம்: இளநீர் விற்பனை அமோகம்




பதிவு செய்த நாள்

06ஏப்
2014 

தர்மபுரி: மாவட்டத்தில், கோடை வெயில் கொளுத்த துவங்கியதால், இளநீர் விற்பனை களை கட்டி உள்ளது. தர்மபுரி மாவட்டத்தில், பல்வேறு பகுதிகளில் உள்ள மரங்கள் யாவும், பல்வேறு பணிக்காக அழிக்கப்பட்டதால், சில ஆண்டுகளாக மாவட்டத்தில் பருவமழை ஏமாற்றி வருகிறது. மேலும், மாவட்டத்தில் வெயிலின் அளவும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தாண்டு பிப்ரவரி மாதம் துவக்கத்தில், பகல் நேரங்களில் வெயிலின் அளவு அதிகரித்து வந்தது.
மார்ச் மாதத்தில், கடந்த, 20ம் தேதி, 100.4 டிகிரியும், 21ம் தேதி, 100, 22ம் தேதி 100.7, 24ம் தேதி, 100, 25ம் தேதி 100.4, 29ம் தேதி, 101.3, 31ம் தேதி, 102.2 டிகிரியும், ஏப்ரல், 1ம் தேதி 102.2, 2ம் தேதி, 103.1 டிகிரி என வெயில் கொளுத்தியது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்து வந்தனர்.
தர்மபுரி மாவட்டத்தில், சில தினங்களாக பகல் நேரங்களில் வாட்டி வரும் வெயிலில் இருந்து உடல் நலத்தை பாதுகாத்து கொள்ள, கோடைக்கு இதம் தரும் வகையில், இயற்கை பானமான இளநீர் கடைகளை பொதுமக்கள் நாடி வருவதால், இளநீர் விற்பனை களை கட்டி உள்ளது.
இதுகுறித்து, இளநீர் வியாபாரி கிருஷ்ணராஜ் கூறியதாவது:
தர்மபுரியில், கோடை காலங்களில் இளைஞர்கள் மற்றும் பெண்கள் அதிகளவில் பாட்டில்களில் அடைக்கப்பட்ட குளிர்பானங்களை, கடந்த காலங்களில் அதிகளவு பருகி வந்தனர்.
அவற்றில், பூச்சி மருந்து கலப்பதாக எழுந்த புகாரால், இயற்கை பானமான இளநீரை இளைஞர்கள் மற்றும் பெண்கள் ஆர்வமாக வாங்கி பருகி வருகின்றனர். குறிப்பாக, சில தினங்களாக, தர்மபுரியில் வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளதால், இளநீர் விற்பனை சூடு பிடித்துள்ளது. பாலக்கோடு, காரிமங்கலம், மாரண்டஹள்ளி ஆகிய பகுதிகளில் இளநீரை மொத்தமாக வாங்கி வந்து, தர்மபுரி பகுதியில், ஒரு இளநீர், 15 ரூபாய்க்கு விற்பனை செய்கிறோம்.
போதிய மழையில்லாததால், இளநீர் கொள்முதல் விலை, கடந்தாண்டை விட தற்போது உயர்ந்துள்ளது. இதனால் எங்களுக்கு குறைந்தளவு லாபம் மட்டும் கிடைக்கிறது. மேலும், கோடை காலங்களில் இளநீர் விற்பனை அதிகரிக்கும் போது, எங்களுக்கு வருமானம் சற்று அதிகரிக்கும், என்றார்.