கள்ளகாதல்; கணவரை கொலை செய்த மனைவி
January 9, 2014 11:57 am
தர்மபுரி மாவட்டம் மாரண்ட அள்ளி அருகே உள்ள மிஸ்கிரிஅள்ளி
கிராமத்தை சேர்ந்தவர் சின்னசாமி (வயது 44). இவரது
மனைவி லட்சுமி (40). சின்னசாமிக்கும் அதே ஊரைச் சேர்ந்த ஒரு
பெண்ணுக்கும் இடையே கள்ளத் தொடர்பு இருந்து வந்தது. இதை மனைவி கண்டித்தார்.
ஆனால் சின்னசாமி கள்ளத் தொடர்பை கைவிட மறுத்து விட்டார்.
இதனால் கணவன்–மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
குடும்பத்தில் நிம்மதி இல்லாமல் போனது. மனைவியை சின்னசாமி திட்டினார்.
இதனால் மனம் வெறுத்து போன லட்சுமி இன்று அதிகாலை 5 மணிக்கு
கணவர் தூங்கிக்கொண்டு இருந்த போது அவரது தலையில் கல்லை போட்டு
விட்டார். இதில் இரத்த வெள்ளத்தில் அவர் பலியானார்.
பின்னர் லட்சுமி மாரண்டஅள்ளி பொலிஸ் நிலையத்துக்கு சென்று க
ணவரை கொன்று விட்டதாக கூறி பொலிஸில் சரண் அடைந்தார்.
அதன் பிறகு பொலிஸார் லட்சுமியின் வீட்டுக்கு சென்று கொலை
செய்யப்பட்ட சின்னசாமி பிணத்தை கைப்பற்றி அரச வைத்தியசாலைக்கு
அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக லட்சுமியிடம்
பொலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
No comments:
Post a Comment