பதிவு செய்த நாள் : ஏப்ரல் 12,2012,00:31 IST
தர்மபுரி: பாலக்கோடு அருகே இரு பைக் மோதியதில், அரசு ஆரம்ப சுகாதார நிலைய புள்ளியாளர் பரிதாபமாக இறந்தார்.
மாரண்டஹள்ளி பவுண்ட் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வட்டார புள்ளியாளராக பணிபுரிகிறார். இவர் நேற்று மதியம் தன்னுடன் பணிபுரியும் சேகருடன் பாலக்கோட்டிலிருந்து தர்மபுரிக்கு பைக்கில் சென்றார். கடமடை ரயில்வே கேட் அருகே சென்ற போது, எதிரே வந்த பைக் ராஜேந்திரன் பைக் மீது மோதியது.
இதில், பலத்த காயமடைந்த ராஜேந்திரன், சேகரை அக்கம், பக்கத்தினர் மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வழியில் ராஜேந்திரன் பரிதாபமாக இறந்தார்.