விபத்தில் 3 பேர் படுகாயம்
கருத்துகள்
பதிவு செய்த நேரம்:2012-04-05 09:53:௨௦கிருஷ்ணகிரி: ராயக்கோட்டை அருகே நடந்த விபத்தில் மாரண்டஅள்ளி வாலிபர்கள் 3 பேர் காயமடைந்தனர்.
தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி நல்லூரை சேர்ந்தவர் தொட்டியப்பன் மகன் முரளி(25). இவர் அதே ஊரை சேர்ந்த சுதாகர்(27), அருள்மணி(36) ஆகியோருடன் ஈரோட்டில் உள்ள தனியார் பனியன் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர்கள் யுகாதி பண்டிக்கைகாக விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தனர். நேற்று முன்தினம் சூளகிரிக்கு சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது, ராயக்கோட்டை தக்காளி மார்க் கெட் அருகே சென்றபோது எதிரே வந்த வேன் மோதுவதுபோல் வந்தது. உடனே, இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த முரளி திடீர் பிரேக் போட்டார். இதில் நிலை தடுமாறிய இருசக்கர வாகனம் சாலையில் கவிழ்ந்ததில் 3 பேரும் கீழே விழுந்து படுகாய மடைந்தனர். இவர்களுக்கு ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. விபத்து குறித்து ராயக்கோட்டை எஸ்ஐ ஆனந்தன் வழக்குப்பதிந்து விசாரிக்கிறார்.
No comments:
Post a Comment