Marandahalli Map

Monday, April 16, 2012

அரசு பள்ளி ஆசிரியர் சாவு

அரசு பள்ளி ஆசிரியர் சாவு
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 16,2012,06:12 IST

தர்மபுரி: பாலக்கோடு அருகே நெஞ்சுவலியால் அரசு பள்ளி ஆசிரியர் திடீரென்று இறந்தார்.
நெல்லை மாவட்டம், சங்கரன்கோவில் கே.வி.ஆலங்குளத்தை சேர்ந்தவர் அருள்சேமராஜ் (35).
 தர்மபுரி மாவட்டம், பஞ்சப்பள்ளி அருகே சொரகுறுக்கை அரசுப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார்.
மாரண்டஅள்ளியில் நண்பர் நாகராஜூடன் வீடு எடுத்து தங்கியிருந்தார்.

நேற்று முன்தினம் மாலை அருள்சேமராஜ் வீட்டில் சாப்பிட்டுகொண்டிருந்தார். அப்போது, திடீரென்று அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.
அவரை அப்பகுதி மக்கள்  மாரண்டஅள்ளி  ஆரம்ப சுகாதார நிலையத்திற் அழைத்து சென்றனர். செல்லும் வழியில் அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து நாகராஜ் மாரண்டஅள்ளி போலீஸில் புகார் செய்தார். போலீஸார் விசாரிக்கின்றனர்.

No comments: