தர்மபுரி அருகே கட்டாய திருமணம் செய்த இளம்பெண் மீண்டும் கடத்தல்: எஸ்.பி.யிடம் புகார்
Dharmapuri செவ்வாய்க்கிழமை, பெப்ரவரி 21, 4:37 PM IST

தர்மபுரி, பிப். 21-
தர்மபுரியை அடுத்த மாரண்டஅள்ளி அருகே உள்ள செட்டி அள்ளியை சேர்ந்தவர் சின்னப்பன். இவரது மனைவி பெருமா. இவர் தர்மபுரி மாவட்ட எஸ்.பி.யிடம் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-
எனது மகள் அஞ்சலியை கடந்த 2004-ம் ஆண்டு கோவிந்தசாமி மகன் அர்ச்சுணன் கடத்தி சென்றார். பின்னர் அஞ்சலியை கைகளை கட்டி வைத்து கட்டாய திருமணம் செய்து கொண்டார். இதற்கிடையே நான் தர்மபுரி முதன்மை அமர்வு நிதிமன்றத்தில் ஆள்கொணர்வு மனுவை தாக்கல் செய்தேன்.
அதன்பிறகு எனது மகளை போலீசார் மீட்டு என்னிடம் ஒப்படைத்தனர். அதன்பிறகு பல முறை என் வீட்டிற்கு வந்த அர்ச்சுணன் எனது மகளை அழைத்து செல்ல வந்தார். நான் மறுத்த போதெல்லாம் என்னை கொலை செய்து விடுவதாக மிரட்டினார். இதற்கிடையே கடந்த 16-ந்தேதி மீண்டும் அர்ச்சுணன் வந்தார். நான் தாலி கட்டிய மனைவி அஞ்சலி அதனால் அவரை என்னிடம் அனுப்பி வைக்க வேண்டும் என்றார். அதற்கு நான் எனது மகள் விருப்பம் இல்லாமல் கட்டாய திருமணம் செய்து கொண்டாய், அதனால் உன்னிடம் அனுப்பி வைக்க முடியாது என்று கூறினேன்.
இதனால் என்னை கொன்றுவிடுவதாக மிரட்டினார். இந்த நிலையில் கடந்த 17-ந்தேதி எனது மகள் அதிகாலை காட்டு பகுதிக்கு சென்றார். அப்போது அங்கு வந்த அர்ச்சுணன் எனது மகள் அஞ்சலியை கடத்தி சென்றுவிட்டார். எனது மகள் எங்கு இருக்கிறார். அவர் என்ன ஆனார் என்பது தெரியவில்லை. இது பற்றி மாரண்டஅள்ளி போலீசில் புகார் கொடுக்க சென்றேன். ஆனால் அவர்கள் எனது புகாரை வாங்க மறுத்துவிட்டார்கள். எனது மகளை கண்டு பிடித்து எங்களுடன் சேர்த்து வைக்க வேண்டும்.
மேலும் எனது மகளை கடத்தி சென்றதோடு, கொலை மிரட்டல் விடுத்த அர்ச்சுணன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார். புகார் மனு மீது விரைந்து நடவடிக்கை எடுப்பதாக எஸ்.பி. உறுதி அளித்தார். இதே போன்று டி.ஐ.ஜி. க்கும் தனது மகள் காணாதது பற்றி பெருமா, புகார் மனு அனுப்பி உள்ளார். கடந்த 2004-ம் ஆண்டு அஞ்சலி 10-ம் வகுப்பு படித்து கொண்டு இருந்தார். அப்போது அர்ச்சுணன் கடத்தி சென்றதால் அதன் பிறகு பள்ளி படிப்பை விட்டு வீட்டிலேயே அஞ்சலி இருந்தார். இந்த நிலையில் மீண்டும் அஞ்சலி கடத்தப்பட்டு உள்ளார்.

No comments:
Post a Comment