ரயில்வே ஸ்டேஷனில் மரங்கள் வெட்டி கடத்தல்
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 01,2012,02:28 IST
தர்மபுரி: மாரண்டஹள்ளி ரயில் ஸ்டேஷனில் வளர்கப்பட்டு வந்த 18 கருவேல மரங்கள் மர்ம நபர்களால் வெட்டி கடத்தினர். கர்நாடக மாநிலம் பெங்களூரு ஹூப்ளி ரயில்வே கோட்டத்தில் தர்மபுரி, மாரண்டஅள்ளி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட ரயில்வே ஸ்டேஷன் உள்ளன. இந்த ரயில்வே ஸ்டேஷனில் ரயில்வே துறைக்கு சொந்தமான கோடிக்கணக்கான மதிப்புள்ள நிலங்கள் உள்ளன. இந்த நிலங்களில் உயர் ரக மரங்கள் வளர்கப்பட்டு வருகிறது.
அதை ரயில்வே ஊழியர்கள் பராமரித்து வருகின்றனர். மாரண்டஹள்ளி ரயில்வே ஸ்டேஷனில் வளர்க்கப்பட்டு வந்த 18 கருவேல மரங்கள் திடீரென வெட்டி கடத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து தர்மபுரி ரயில் பாதுகாப்பு படை போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது. ரயில்வே பாதுகாப்பு படை போலீஸார் மரங்களை வெட்டி கடத்திய மர்மநபர்களை தேடிவருகின்றனர். மரங்களை ரயில்வே ஊழியர்களே வெட்டி கடத்தியிருக்கலாமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுதொடர்பாக போலீஸார் ரயில்வே ஊழியர்களிடம் விசாரிக்கின்றனர்.
No comments:
Post a Comment