Marandahalli Map

Thursday, April 5, 2012

மாரண்டஅள்ளி அருகே இன்ஸ்பெக்டர் மனைவி தீக்குளித்து தற்கொலை எஸ்.பி. விசாரணை

மாரண்டஅள்ளி அருகே இன்ஸ்பெக்டர் மனைவி தீக்குளித்து தற்கொலை எஸ்.பி. விசாரணை

பதிவு செய்த நேரம்:2012-03-30 10:18:௧௮

மாரண்டஅள்ளி:

மாரண்டஅள்ளி அருகே இன்ஸ்பெக்டரின் மனைவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிபவர் விஸ்வநாதன். சிக்கமாரண்டஅள்ளியில் வசித்தார். இவரது மனைவி கலைச்செல்வி (33). இவர்களுக்கு 8 வயதில் ஒரு பெண் குழந்தையும், 2 வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.
நேற்று காலை கலைச்செல்வி வழக்கம்போல் தனது மகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு வீட்டுக்கு திரும்பினார். அப்போது வீட்டில் தண்ணீர் வரவில்லை. இதனால் இன்ஸ்பெக்டர் விஸ்வநாதனுக்கும், கலைச்செல்விக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர், விஸ்வநாதன் பணிக்கு சென்று விட்டார்.
அவர் சென்ற அரை மணி நேரத்தில் வீட்டு கதவை உள்பக்கமாக தாழ்ப்பாள் போட்டுக் கொண்டு கலைச்செல்வி தீ வைத்துக் கொண்டார். ஆண் குழந்தை வீட்டின் வெளியே கதறி அழுது கொண்டிருந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் விஸ்வநாதனுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து அவர் வீட்டு க்கு விரைந்து வந்தார். வீட்டு கதவின் தாழ்ப்பாளை உடைத்து உள்ளே சென்றார். அங்கு கலைச்செல்வி உடல் கருகிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அவரை விஸ்வநாதன் மற்றும் அப்பகுதி மக்கள் மீட்டு மாரண்டஅள்ளி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே அவர் இறந்தார். இதுகுறித்து தகவலறிந்த தர்மபுரி மாவட்ட எஸ்.பி அமீத்குமார் சிங், டி.எஸ்.பி. நடராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட கலைச்செல்வியின் சகோதரர் நாமக்கல்லை சேர்ந்த மான்சிங் என்பவர் மாரண்டஅள்ளி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதில், எனது சகோதரி கலைச்செல்விக்கு முன்கோபம் அதிகம். அவர் எளிதில் உணர்ச்சி வசப்படுவார். தண்ணீர் வரவில்லை என்பதால் ஏற்பட்ட தகராறு காரணமாகவே அவர் தீக்குளித்துள்ளார் என்று கூறியுள்ளார். கலைச்செல்வியின் மரணத்துக்கான காரணம் குறித்து மாரண்டஅள்ளி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

No comments: