மூன்று இடங்களில் திடீர் தீ விபத்து
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 22,2012,01:11 IST
பாலக்கோடு: பாலக்கோடு அருகே மூன்று இடங்களில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
பாலக்கோடு அடுத்த கல்கோடப்பட்டியை சேர்ந்தவர் சித்ரா. இவரது தென்னந்தோப்பில் அருகே உள்ள முள்வேலியில் நேற்று முன்தினம் மாலை தீ பிடித்தது. தீ மளமளவென தென்னந்தோப்பிலும் பரவியது. கிராம மக்கள் தீயை அணைக்க முயற்சித்தனர். தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. பாலக்கோடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு படையினர் அங்கு தீயை அணைத்தனர். இதில், தென்னை மரங்கள், விளக்கமாறு முடைவதற்காக வைக்கப்பட்டிருந்த ஓலைகள் நாசமானது.
* விளாம்பட்டி கிராம ஏரியில் உள்ள கருவேல முள் மரங்களில் நேற்று முன்தினம் மாலை தீ பிடித்தது. அந்த தீ அருகில் உள்ள விளை நிலங்களில் பரவும் சூழ்நிலை ஏற்பட்டது. இதகுறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்ற தீ பரவாமல் தடுத்தனர்.
* மாரண்டஅள்ளி அடுத்த அத்திமுட்லுவை சேர்ந்தவர் மாதன் என்பவரது குடிசை வீட்டிலுல் தீ பிடித்தது. இதில், 15,000 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் நாசமானது
No comments:
Post a Comment