கார் கவிழ்ந்து பெண்கள் உள்பட 10 பேர் படுகாயம்

ஒகேனக்கல்லுக்கு காரியத்துக்கு சென்று திரும்பிய போது பாலக்கோடு அருகே கார் கவிழ்ந்து பெண்கள் உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கார் கவிழ்ந்து விபத்து
தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே உள்ள பொம்மனூரை சேர்ந்தவர் ராஜி. இவரது மகன் கோவிந்தராஜி(வயது35). கார் டிரைவர். இவர் மல்லுப்பட்டியை சேர்ந்த ஒருவர் இறந்த துக்க நிகழ்ச்சியின் இறுதி காரியத்துக்கு காரில் 10 பேரை அழைத்து கொண்டு ஒகேனக்கல் சென்றார். அங்கு இறுதி காரியம் முடிந்த பின்னர் அனைவரும் மீண்டும் மல்லுப்பட்டி நோக்கி காரில் சென்றனர்.
அப்போது பாலக்கோடு ரெயில்வே கேட்டில் உள்ள வேகத்தடையில் கார் ஏறி இறங்கிய போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தலைப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் காரை ஓட்டி சென்ற டிரைவர் கோவிந்தராஜ் மற்றும் மல்லுப்பட்டியை சேர்ந்த தனுசு(41), கோவிந்தராஜ்(50), ஓசூரை சேர்ந்த ஜெயதேவ்(16), சாந்தினி(19, பார்வதி(50), கடத்தூரை சேர்ந்த ராஜம்மாள்(45), வெள்ளிச்சந்தை பகுதியை சேர்ந்த சுந்தராம்பாள்(60), பாம்பம்மாள்(70), பெங்களூரை சேர்ந்த ஜெயா(48) ஆகிய 10 பேரும் படுகாயம் அடைந்தனர்.
ஆஸ்பத்திரியில் சிகிச்சை
ரெயில்வே கேட் பகுதியில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதை அறிந்த பொதுமக்கள் விரைந்து சென்று இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்த அனைவரையும் மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த பாப்பாரப்பட்டி போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து குறித்து தகவல் அறிந்த காயம் அடைந்தவர்களின உறவினர்கள் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்தனர். இதனால் ஆஸ்பத்திரி வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
No comments:
Post a Comment