தர்மபுரி,
‘தேர்தலின் போது வாக்குறுதி அளித்தபடி தர்மபுரி-மொரப்பூர் ரெயில் பாதை அமைக்க நடவடிக்கை எடுப்பேன்’ என்று அன்புமணி ராமதாஸ் எம்.பி. பேசினார்.
நன்றி தெரிவிக்கும் கூட்டம்
தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பா.ம.க வேட்பாளராக டாக்டர் அன்புமணி ராமதாஸ் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதையடுத்து தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், பொறுப்பாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் தர்மபுரி வன்னியர் திருமண மண்டபத்தில் நடந்தது. கூட்டத்திற்கு பா.ம.க. தலைமை நிர்வாக குழு உறுப்பினர் டாக்டர் செந்தில் தலைமை தாங்கினார். மாநில துணை பொதுச்செயலாளர் சரவணன் வரவேற்று பேசினார். மாவட்ட செயலாளர்கள் சாந்தமூர்த்தி, அரசாங்கம், மாவட்ட அமைப்பு செயலாளர் வெங்கடேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கலந்துகொண்டு கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்து பேசியதாவது:-
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட என்னை வெற்றி பெற செய்த வாக்காளர்களுக்கும், இரவு, பகல் பாராமல் அயராது உழைத்த கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் எனது நன்றியினை தெரிவித்து கொள்கிறேன். இது எனக்கு கிடைத்த வெற்றி அல்ல, இந்த தொகுதி மக்களுக்கு கிடைத்த வெற்றி. நாடு முழுவதும் மோடி அலை வீசியது. ஆனால் தமிழகத்தில் பண அலை வீசியது. பண வினியோகத்தையும் மீறி தர்மபுரி தொகுதி மக்கள் பாசத்திற்காக பணத்திற்கு விலை போகாமல் மாம்பழம் சின்னத்திற்கு வாக்களித்து சரித்திர சாதனை புரிந்துள்ளனர்.
ரெயில் பாதை
தேர்தலின் போது பொதுமக்களுக்கு நான் கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவேன். மக்களின் பிரச்சினைகளுக்காகவும், தமிழகத்தின் நலன் காக்கவும் என்றும் பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பேன். தர்மபுரி-மொரப்பூர் இடையே ரெயில் பாதை அமைக்கும் திட்டத்தை கொண்டு வர நடவடிக்கை எடுப்பேன். இந்த மாவட்டத்தில் இளைஞர்களின் நலன் கருதி வேலைவாய்ப்புகளை உருவாக்க தொழிற்சாலைகளை கொண்டுவர நடவடிக்கை எடுப்பேன். பெண்களுக்கு கொடுத்த வாக்குறுதிபடி மதுக்கடைகளை படிப்படியாக மூட பாடுபடுவேன்.திராவிட கட்சிகளுக்கு மாற்றாக உருவாகியுள்ள இந்த கூட்டணியால் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. இருக்கும் இடம் தெரியாமல் 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அடுத்த 2 ஆண்டுகள் நாம் நன்றாக உழைத்தால் வருகிற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வை தோற்கடித்து நமது கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெறும். 2016-ம் ஆண்டு நாம் ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்து பூரண மதுவிலக்கு கொண்டு வருவது தான். தர்மபுரி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அலுவலகம் திறக்கப்பட்டு பொதுமக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்.
இவ்வாறு அன்புமணி ராமதாஸ் எம்.பி. பேசினார்.
திறந்த ஜீப்பில் நன்றி தெரிவித்தார்
இந்த கூட்டத்தில் தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் டாக்டர் இளங்கோவன், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் சம்பத், பா.ஜ.க. மாவட்ட தலைவர் கந்தசாமி, தொகுதி பொறுப்பாளர் பிரபாகரன், முன்னாள் எம்.எல்.ஏ. வேலுசாமி, வன்னியர் சங்க மாநில துணைத்தலைவர் பாடிசெல்வம் உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட நிர்வாகி மாது நன்றி கூறினார்.
இதனைத்தொடர்ந்து அன்புமணி ராமதாஸ் எம்.பி. பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பிக்கிலி ஊராட்சியில் உள்ள பல்வேறு கிராமங்களில் திறந்த ஜீப்பில் சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். தொடர்ந்து அவர் இன்று (வியாழக்கிழமை) தர்மபுரி நகரம் மற்றும் ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்களில் வாக்காளர்களுக்கு நேரில் சென்று நன்றி கூறுகிறார்.

No comments:
Post a Comment